

திருவள்ளூர்: திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டுக்கான கரும்பு அரைவையை சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 2025-26 ஆண்டு பருவ கரும்பு அரைவையினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை(அக்.12) நடைபெற்றது.
இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை வகித்து கரும்பு அரைவை இயந்திரத்திற்குள் கரும்பு கட்டுகளை வைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது ஆட்சியர் மு.பிரதாப், திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் ச.சந்திரன், கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் அ.மீனா அருள், கரும்பு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.