

மேட்டூர் அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் சனிக்கிழமை ரசாயன தொட்டியில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். நல்லவாய்ப்பாக பெரும் அசாம்விதங்கள் எதுவும் நிகழவில்லை.
மேட்டூர் அருகே கருமலைக்கூடல் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் மற்றும் உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அங்குள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் சனிக்கிழமை 10-க்கும் மேற்பட்ட தொழிலார்கள் வேலை பார்த்துவந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக ரசாயன தொழிற்சாலை பாய்லர் வெடித்து சிதறியது. இதில், பணியில் இருந்த வட மாநில தொழிலாளர்களான ராகேஷ், சல்மான் ஆகிய இரண்டு பேருக்கும் காலில் ரசாயனம் பட்டதில் பாதிப்புக்குள்ளாகினர்.
மேலும், பலர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் எதுவும் நிகழவில்லை என கூறப்படுகிறது.
மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.