கரூர் கூட்ட நெரிசல் பலி: வங்கி கணக்கில் மத்திய அரசின் ரூ. 2 லட்சம் நிதி!

கரூர் கூட்ட நெரிசல் பலியானவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்கில் மத்திய அரசு அறிவித்திருந்த ரூ.2 லட்சம் நிவாரணமும் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வரவு வைக்கப்பட்டது தொடர்பாக...
கரூர் வேலுசாமிபுரத்தில் நெரிசல் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் நெரிசல் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர்.
Published on
Updated on
1 min read

கரூர்: தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜய் செப்.27 இல் கரூா் நகரில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 போ் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு அறிவித்திருந்த ரூ.2 லட்சம் நிதியுதவி அவர்களது வங்கி கணக்குகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், 110 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தின் போது வீட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினரையும் மற்றும் படுகாயம் அடைந்தவர்களையும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான மத்தியக் குழுவினர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

அப்போது மத்திய அரசின் சார்பில் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மத்திய அரசு அறிவித்த நிவாரண நிதியான ரூ.2 லட்சம் இறந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கி கணக்குகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வரவு வைக்கப்பட்டிருந்தது அவர்களது செல்போனில் வந்திருந்த குறுஞ்செய்தி மூலம் தெரிய வந்ததுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் அறிவித்த தலா ரூ.20 லட்சமும் கடந்த வாரம் பலியானவர்களின் குடும்பத்தினரின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.

Summary

Karur stampede victim: Central government's Rs. 2 lakh funds deposited in bank account...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com