பிரேசிலில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் மீது தாக்குதல்: போலீசார் உள்பட 64 பேர் பலி

பிரேசிலில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 64 பேர் பலியானது தொடர்பாக...
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப் பொருள் கடத்தல் கும்பலை பிடிக்கும் பணியில் ராணுவம் மற்றும் போலீசார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப் பொருள் கடத்தல் கும்பலை பிடிக்கும் பணியில் ராணுவம் மற்றும் போலீசார்.
Published on
Updated on
1 min read

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப் பொருள் கடத்தல் கும்பலைப் பிடிக்க போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 4 போலீஸ் அதிகாரிகள் உள்பட குறைந்தது 64 பேர் பலியாகினர், 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரியோ டி ஜெனிரோவில் செவ்வாய்க்கிழமை போதைப் பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்து வருவதை அடுத்து, அதனை தடுக்கும் நடவடிக்கையாக 2500-க்கும் மேற்பட்ட பிரேசில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையடுத்து போலீசார் தக்க பதிலடி கொடுத்தனர். இதனால் அந்தப்பகுதி போர்களம் போல் காட்சியளித்தது.

இந்த தாக்குதலின் போது நான்கு போலீஸ் அதிகாரிகள் உள்பட 64 பேர் பலியாகினர். 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என பாதுகாப்பு அதிகரிகள் தெரிவித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், போலீசார் - போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு இடையே நடந்து வரும் தாக்குதலின் போது 42 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போலீசார் மீது ட்ரோன்கள் தாக்குதல்

போதைப் பொருள் கடத்தல் கும்பல் பழிவாங்கும் நடவடிக்கையாக போலீசார் மீது ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகக் அந்த மாகாண அரசு தெரிவித்துள்ளது. "பென்ஹா வளாகத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளை குறிவைத்து கடத்தல் கும்பல் ட்ரோன்களைப் பயன்படுத்தியாதாகவும், ட்ரோன் எரிபொருள்களை வீசும் விடியோ பதிவை அந்த மாகாண அரசு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டத்தை அழிக்கும் நடவடிக்கைக்காக ஒரு ஆண்டிற்கு மேலாக திட்டமிடப்பட்டு வந்ததாகவும், இதற்காக 2,500- க்கும் மேற்பட்ட ராணுவ மற்றும் காவல் துறையினர் கொண்டு குழுவினர் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்தது. இது சமீப ஆண்டுகளில் நடத்த துப்பாக்கிச் சூடு என அதிகாரிகள் கூறினர்.

போதைப் பொருள் கடத்தல் கும்பலை அழிப்பது இந்த சோதனையின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பரபரப்பு சம்பத்தை அடுத்து ரியோ டி ஜெனிரோவில் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Summary

At least 64 people, including four police officers, were killed in a large-scale security operation targeting organised crime in Rio de Janeiro on Tuesday (local time) citing officials.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com