

வரலாற்றில் மிக வலிமையான புயலாக உருவாகியுள்ள மெலிஸா, ஜமைக்காவின் வடக்கு கடற்கரையில் மையம் கொண்டுள்ளது.
3ஆம் நிலை தீவிரத் தன்மை கொண்ட புயலாக ஜமைக்காவில் நிலைக்கொண்டுள்ளதால், பல்வேறு பாதிப்புகளை அந்நாடு சந்தித்து வருகிறது.
மத்திய அமெரிக்க பகுதியில் கடலில் வேகமாக நகர்ந்து வந்த மெலிஸாவால், தென்மேற்கு ஜமைக்கா கடும் சேதங்களை சந்தித்துள்ளது. பல்வேறு வீடுகள், மருத்துவமனைகள், பள்ளி கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
மெலிஸா புயலால் ஜமைக்காவுக்கு 'பேரழிவு சேதம்' ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னஸ் தெரிவித்துள்ளார்.
புயலால் ஜமைக்காவில் 3 பேரும், ஹைதியில் 3 பேரும் டொமினிக் குடியரசுவில் ஒருவர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், புயல் முழுமையாகக் கடப்பதற்குள் பெரும் நிலச்சரிவு, கனமழை போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. கியூபாவின் தென்கிழக்கு கடற்கரையில் 8 முதல் 12 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்புகின்றன. இது வெள்ள பாதிப்புகளை கடுமையாக்கும் என அஞ்சப்படுகிறது.
தற்போது ஜமைக்காவின் வடகிழக்குப் பகுதியை நோக்கி 201 கி.மீ. வேகத்தில் மெலிஸா புயல் நகர்ந்து வருகிறது. உள்ளூர் நேரப்படி இன்று நள்ளிரவில் 4 அல்லது 3ஆம் நிலை தீவிரத் தன்மை கொண்ட புயலாக கியூபாவை நோக்கி நகரவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.