வெள்ளியங்கிரி கோயிலுக்குள் நுழைந்த யானை இறந்தது எப்படி?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

வெள்ளியங்கிரி கோயிலுக்குள் நுழைந்த யானை இறந்ததற்கான காரணம் குறித்து வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள தொர்பாக...
சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
Published on
Updated on
1 min read

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் நுழைந்த காட்டு யானை இறந்ததற்கான காரணம் குறித்து தமிழக வனத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் அக்டோபர் முதல் வாரத்தில் திடீரென காட்டு யானை ஒன்று நுழைந்தது. கோயிலுக்குள் யானை நுழைந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் மற்றும் ஊடகங்களில் வெளியாகின.

பின்னர், கோயிலுக்குள் உலாவிய அந்த யானை இரண்டு நாள்களில் இறந்துள்ளது. யானை இறந்ததற்கான காரணம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை, இறந்த யானையின் உறுப்புகளைை தடயவியல் ஆய்வுக்கும் அனுப்பவில்லை, இறப்பு குறித்தும் தெரியப்படுத்தாமல் உடல்கூராய்வு செய்துவிட்டு யானையை வனத்துறை புதைத்து விட்டதாக சென்னை கோட்டூர் கார்டன் பகுதியைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சதீஷ்குமார் பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் முறையீடு செய்தார்.

இதையடுத்து நீதிபதிகள் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வெளியான விடியோக்களை பார்க்கும்போது யானை கோயிலுக்குள் நுழைந்த போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது தெரிகிறது. அப்படி இருக்கையில் யானை இறந்ததற்கான காரணம் குறித்து விபரங்கள் உடன் உடல்கூராய்வு பரிசோதனை அறிக்கையை தமிழ வனத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணை வருகிற நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Summary

How did the elephant that entered the Velliangiri temple die?: Madras High Court questions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com