

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு, மத்திய இணையமைச்சர் எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தேவரின் நினைவிடத்தில் மலர் தூவியும், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள தேவரின் திருவுருவச் சிலைக்கு, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வின் போது, பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற அலுவலகச் செயலாளர் வேணுகோபால் உள்ளிட்ட தில்லி வாழ் தமிழ் மக்கள் பலரும் உடன் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.