

முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையையொட்டி, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார்.
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவுள்ளதால் அங்கு சுமார் 8,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.