

சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் இரும்பு மனிதா் என அழைக்கப்படும் சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த நாள் ஒவ்வோா் ஆண்டும் அக். 31-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய நாள் நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை நிறைவேற்றவும் தேசிய ஒற்றுமை நாள் அணிவகுப்பில் கலந்து கொள்ளவதற்கு முன்னதாக, நாட்டின் முதல் உள்துறை அமைச்சரின் 150 ஆவது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், குஜராத்தின் நர்மதா மாவட்டம் ஏக்தா நகரில் உள்ள 182 மீட்டர் உயர சா்தாா் வல்லபபாய் படேல் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
"இந்தியாவின் இரும்பு மனிதர்" படேலின் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், 2014 முதல் தேசிய ஒற்றுமை நாள் என்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கொண்டாட்டங்களில் கலாசார விழா மற்றும் பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப் மற்றும் பல்வேறு மாநில காவல் படைகளின் குழுவினரைக் காண்பிக்கும் பிரமாண்ட அணிவகுப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டு, குடியரசு நாள் அணிவகுப்பைப் போலவே அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இந்த நிகழ்வு இன்னும் சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளது.
உந்து சக்தி சர்தார் வல்லபாய் படேல்
சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,
சர்தார் வல்லபாய் படேலின் 150 ஆவது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் ஒருங்கிணைப்புக்குப் பின்னால் இருந்த உந்து சக்தியாக சர்தார் வல்லபாய் படேல் இருந்தார், இதன் மூலம் நாட்டின் வளர்ச்சி ஆண்டுகளில் நாட்டின் விதியை வடிவமைத்தார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தேசிய ஒருமைப்பாடு, நல்லாட்சி மற்றும் பொது சேவைக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கிறது.
சர்தார் படேலின் ஒன்றுபட்ட, வலுவான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியா என்ற அவரது தொலைநோக்குப் பார்வையை நிலைநிறுத்துவதற்கான கூட்டுத் தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்துவோம் என நாட்டு மக்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோல் தில்லியில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேல் சிலைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார்.
Modi offered flowers at the 182-metre-tall statue in Ekta Nagar before heading to a nearby venue to administer the Ekta Diwas pledge and attend the National Unity Day parade.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.