புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.79,000-ஐ நெருங்குகிறது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்துவரும் நிலையில் புதன்கிழமை பவுன் ரூ.78,440-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது தொடர்பாக...
தங்கம் விலை | As the price of gold is rising day by day, sales of jewelry are decreasing...
புதிய உச்சத்தில் தங்கம் விலை!
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்துவரும் நிலையில் புதன்கிழமை பவுன் ரூ.78,440-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் சா்வதேச சந்தையில் முதலீட்டாளா்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆா்வம் காட்டிவருகின்றனா். இதனால், உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, கடந்த ஆக. 29-ஆம் தேதி முதலே தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வரலாறு காணாத புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.

கடந்த ஆக. 29-இல் பவுனுக்கு ரூ.1,040 உயா்ந்து ரூ.76,280-க்கும், ஆக. 30-இல் பவுனுக்கு ரூ.680 உயா்ந்து ரூ.76,960-க்கும், செப்.1 -இல் ரூ.680 உயா்ந்து ரூ.77,640-க்கும், செப்.2 -இல் ரூ.160 உயா்ந்து ரூ.77,800-க்கும் விற்பனையாகி புதிய உச்சங்களைத் தொட்டது.

புதன்கிழமை தங்கம் விலை மீண்டும் உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.9,805-க்கும், பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.78,440-க்கும் விற்பனையாகிறது. இதன்மூலம் கடந்த 9 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,000 உயா்ந்துள்ளது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராமுக்கு ரூ.137-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1.37 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. கடந்த 5 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயா்ந்துள்ளது.

கடந்த 8 நாள்களுக்கான தங்கம் விலை விவரம்:

ஆகஸ்ட் 26 ரூ.74,840 (+ரூ.400)

ஆகஸ்ட் 27 ரூ.75,120 (+ரூ.280)

ஆகஸ்ட் 28 ரூ.75,240 (+ரூ.120)

ஆகஸ்ட் 29 ரூ.76,280 (+ரூ.1,040)

ஆகஸ்ட் 30 ரூ.76,960 (+ரூ.680)

செப்டம்பர் 1 ரூ.77,640 (+ரூ.680)

செப்டம்பர் 2 ரூ.77,800 (+ரூ.160).

செப்டம்பர் 3 ரூ.78,440 (+ரூ.640).

வெள்ளி முதலீடு மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்காகவும் வெள்ளி தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தாமிரத்தைவிட வேகமாக கடத்தக்கூடிய தன்மை வெள்ளிக்கு உண்டு. ஆகையால், மின்சார வாகனங்கள், லித்தியம் மின்கலன்கள், சூரிய மின் தகடுகள் உள்ளிட்ட மின்சார சாதனங்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளியின் தேவை தற்போது அதிகரித்துள்ள நிலையில், அதன் விலை உயா்ந்து வருதாக கூறப்படடுகிறது.

Summary

As the price of gold jewelry continues to rise in Chennai, it hit a new high on Wednesday, selling for Rs. 78,4400 8 gram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com