
விராலிமலை: ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, இலுப்பூர் தாலுகா அலுவலகங்களில் 56 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறையில், காலியாக உள்ள, 564 உதவியாளர் பணியிடங்களை நிரப்புதல், உங்களுடன் ஸ்டாலின் முகாம் அதிக அளவில் நடத்துவதை குறைத்து வாரத்துக்கு இரண்டு முகாம்கள் நடத்தல்(பணிச்சுமையை குறைக்க வேண்டும்) உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, இலுப்பூர் தாலுகா அலுவலகங்களில் 56 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சதீஸ் சரவணகுமார் கூறியது:
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் வாரத்திற்கு, 6 நாள்கள் நடத்த வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. முகாம் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். நீண்ட நாள்களாக நிலுவையிலுள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பேரிடர் மேலாண்மை பணியிடங்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நிரப்பாமல் 3 ஆண்டுகளாக காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம் நடத்த ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக கடந்த மாதம் 7 ஆம் தேதி அரசு தலைமைச் செயலாளரை சந்தித்து, கோரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டது. 2 ஆம் கட்டமாக தமிழகத்திலுள்ள, 16,000 அலுவலர்கள் கடந்த 16 ஆம் தேதி மாலை ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருவாய் துறை அமைச்சரை சந்தித்து முறையிடப்பட்டது.
இந்நிலையில், கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காததால் 3 ஆவது கட்டமாக புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் (செப் 3, 4) 48 மணி நேரம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டு 48 மணி நேரம் பணியில் ஈடுபடுவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டு போராட்டம் தொடர்கிறது என்றார்.
மேலும், தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக தீர்வு காண வேண்டும் என அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.