
திருப்பதி: சந்திர கிரகணத்தையொட்டி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கதவுகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மூடப்பட்டது.
சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31 மணி வரை நிகழவுள்ளது.
இதனையொட்டி கிரணத்திற்கு 6 மணி நேரம் முன்பு கோயில்கள் கதவுகள் மூடப்படுவது மரபு.
தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்கள் கதவுகள் மூடப்பட்டது.
இந்நிலையில், திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலின் கதவுகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் திங்கள்கிழமை(செப் 8) அதிகாலை 3 மணி வரை மூடப்பட்டிருக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆா். நாயுடு தெரிவித்தார்.
அதேபோன்று தேவஸ்தானம் தொடா்புடைய அனைத்து கோயிகளும் ஞாயிற்றுக்கிழமை மதியம் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை காலை வேதங்களின்படி சுத்திகரிப்பு மற்றும் பிற சடங்குகளை முடித்த பிறகு, ஏழுமலையான் கோயில் கதவுகள் அதிகாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். பின்னர் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள் என்று கூறினாா்.
மேலும், செப்டம்பர் 16 ஆம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தை தேவஸ்தானம் நடத்த உள்ளது. இதன் காரணமாக , செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் விஐபி பிரேக் தரிசனங்களுக்கு எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது. பக்தா்கள் இதை மனதில் கொண்டு தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்குமாறு தேவஸ்தானம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.