சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அடையாறு பகுதியில் உள்ள மருத்துவர் இந்திரா வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வரும் அமலாக்கத்துறை அலுவலர்கள்.
சென்னை அடையாறு பகுதியில் உள்ள மருத்துவர் இந்திரா வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வரும் அமலாக்கத்துறை அலுவலர்கள்.
Published on
Updated on
1 min read

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை அடையாறு பகுதியில் உள்ள மருத்துவர் இந்திரா வீட்டில் அமலாக்கத்துறை அலுவலர்கள் புதன்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோன்று வேளச்சேரி, மேற்கு மாம்பலம் மற்றும் அடையாறு பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சட்ட விரோத பண பரிவர்தனை தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2 ஆம் தேதி சென்னையில் கே.கே.நகர், தியாகராயநகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.

இதேபோன்றுபாளையங்கோட்டை தியாகராஜ நகா் 3 ஆவது வடக்கு தெருவைச் சோ்ந்த பிரபல தனியாா் வங்கியின் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.

சோதனையின் போது ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. சோதனையின்போது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Enforcement officers are conducting raids in the Guindy and Adyar areas of Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com