திண்டுக்கல் அருகே பஞ்சு ஆலையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்

திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு ஆலை உள்ளது. இந்த ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில் இருந்து கரும்புகை வெளியேறுவதைப் பார்த்த அந்த பகுதியினர், இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்புத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலான போராட்டத்துக்குப் பிறது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்தில் ஆலையில் வைக்கப்பட்டிருந்து பல லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் மின் கசிவு காரணமாக ஆலையில் தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இதுபோன்று கோவை பீளமேடு அருகே உள்ள தண்ணீா்ப்பந்தல் பகுதியில் யுகேந்திரா என்பவருக்குச் சொந்தமான தனியாா் நூல் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகை வெளியேறுவதைப் பாா்த்த அந்தப் பகுதியினா், இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா்.

சம்பவ இடத்துக்கு பீளமேடு, கணபதி, கோவை தெற்கு ஆகிய 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வாகனங்களில் வந்த 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் 10 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விபத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பிலான 6 இயந்திரங்கள் மற்றும் ஏராளமான நூல் பேல்கள் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் மின் கசிவு காரணமாக ஆலையில் தீ விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.

Summary

On Friday night, the fire broke out inside the cotton mill. The Dindigul Fire Department was immediately informed, and firefighters rushed to the spot. With the help of two fire tenders, the fire was brought under control after over an hour of efforts.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com