தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ400 குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ400 குறைந்துள்ளது. PTI
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், இந்த வாரம் தொடக்கம் முதலே சற்று ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

கடந்த செப்.15-இல் தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.81,680-க்கு விற்பனையான நிலையில், செப்.16-இல் பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.82,240-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் கிராம் பத்தாயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால் சாமானிய மக்களிடையே பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, புதன்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.10,270-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.82,160-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து விற்பனையாகிறது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.10,220-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.81,760-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.141-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1.41 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

The price of gold jewelry in Chennai fell by Rs. 400 per 8 grms on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com