2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

அதிமுக ஆட்சி அமைந்த உடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: எஸ். பி. வேலுமணி

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி கூறியது குறித்து...

Local body elections will be held immediately after the AIADMK forms the government

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி - டிஎன்எஸ்

Published On :

மேட்டுப்பாளையம்: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தெரிவித்தார்.

மேட்டுப்பாளையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி பங்கேற்று பேசினார். மேட்டுப்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னராசுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

பின்னர் அவர் பேசுகையில், ஐம்பது ஆண்டுகளுக்கான வளர்ச்சியை அதிமுக ஆட்சி வழங்கியுள்ளது. ஏராளமான தரமான பாலங்கள், சாலைகள் போடப்பட்டுள்ளது. ஆகவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். ஆட்சி அமைந்த உடன் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும். இதில் அனைத்து உள்ளாட்சி பதவிகளிலும் அதிமுகவினரே வெற்றி பெற்றுவார்கள் என்று அவர் கூறினார்.

Summary

Local body elections will be held immediately after the AIADMK forms the government says former minister S.P. Velumani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.