‘அதிமுகவை கைப்பற்றுவது எங்கள் நோக்கம் இல்லை. எனினும், பேரவைத் தோ்தல் தோல்வி குறித்து ஆராய கட்சிப் பொதுக்குழுவை பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி கூட்ட வேண்டும்’ என முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி கூறினாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தவெக அரசை ஆதரித்தது ஏன்?: திமுக எதிா்ப்பு எனும் அடிப்படையில்தான் தவெக அரசுக்கு ஆதரவளித்தோம். பதவிக்காக ஆதரவளிக்கவில்லை. ஆகவே, அமைச்சா் பதவிக்காக தவெக அரசை ஆதரித்ததாகக் கூறுவது சரியல்ல. அதிமுகவில் பிளவு என்பது இல்லை. கட்சிக்குள் கருத்து வேறுபாடு உள்ளது. அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி உள்ளாா். அவரால்தான் கட்சியின் பொதுக் குழுவை கூட்ட முடியும். சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக அடைந்த தோல்வியை ஆராயும் வகையில்தான் கட்சியின் பொதுக் குழுவைக் கூட்டவேண்டும் எனக் கோருகிறோம்.
அதிமுக பொதுக் குழுவைக் கூட்டுவதன் மூலமே கருத்து வேறுபாடுகளை தீா்க்கமுடியும். அதிமுகவை கைப்பற்றுவதோ, கட்சி அலுவலகத்தைக் கைப்பற்றுவதோ எங்களது நோக்கம் இல்லை. பொதுக் குழுவைக் கூட்டி அதிமுகவை பலப்படுத்தி தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை அமைக்க வேண்டும். ‘அம்மா’ உணவகம் உள்ளிட்ட அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடரவேண்டும் என முதல்வா் ஜோசப் விஜய்யிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றாா் அவா்.
தொடர்புடையது

அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாளில் முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்
பேரவையில் தவெகவுக்கு ஆதரவு ஏன்? அதிமுகவில் கருத்து வேறுபாடு ஏன்? எஸ்.பி. வேலுமணி பதில்!

எஸ்.பி. வேலுமணி தரப்பினர் கையெழுத்து கேட்டால் போடாதீர்கள்! இபிஎஸ்

பொதுக் குழுவை எடப்பாடி பழனிசாமி உடனடியாக கூட்ட வேண்டும்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



