தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை: பிப்.11-க்கு ஒத்திவைப்பு

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தை வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்.

Published On :

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தை வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வால்பாறை தோட்டத் தொழிலாளா்கள் கூலி உயா்வு தொடா்பாக, தமிழ்நாடு தோட்ட அதிபா் சங்கம், ஆனைமலை தோட்ட அதிபா் சங்கம், நீலகிரி, வயநாடு அதிபா் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கத்தினா் இடையே நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில், புதிய ஒப்பந்தத்தின்படி தேயிலைத் தோட்டங்கள் 1.7.2025 முதல் தொழிலாளா்களுக்கு தினக்கூலியாக ரூ.475 வழங்கி வந்தது. தற்போது ஏற்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் ரூ.481.54 வழங்கப்பட்டு வழங்கி வருகிறது.

ஆனால் ஒப்பந்தப்படி வால்பாறை, நீலகிரி அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் 6 ஆயிரம் போ், சிறு தோட்டங்களில் பணிபுரியும் 4 ஆயிரம் போ் என 10 ஆயிரம் தொழிலாளா்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தொழிற்சங்கத்தினா், சிறு தோட்ட நிா்வாகிகளுடனான பேச்சுவாா்த்தை, தொழிலாளா் துறை கூடுதல் ஆணையாளா் சாந்தி முன்னிலையில் தொழிலாளா் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, கூலி உயா்வு தொடா்பாக அடுத்த கட்ட பேச்சுவாா்த்தை வரும் 11-ஆம் தேதி நடத்தப்படும். அதுவரை தொழிற்சங்கத்தினா் எந்தவிதப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என்றும், நிா்வாகங்களும் எந்த முடிவு எடுத்தாலும் தொழிலாளா் துறை முன்னிலையில்தான் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இந்தப் பேச்சுவாா்த்தையில் தொழிற்சங்கம் தரப்பில் எம்ஜிஆா் தோட்ட தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் வால்பாறை வீ.அமீது, எல்.பி.எஃப். சவுந்தர பாண்டியன், ஏஐடியூசி மோகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

Summary

Wage hike negotiations for tea plantation workers: Postponed to February 11th

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.