/

விஜயகாந்தை நேசிப்பவா்கள் திமுக கூட்டணியை ஏற்க மாட்டாா்கள்: தவெக இணைப் பொதுச் செயலா் பேட்டி

தேமுதிக நிறுவனா் விஜயகாந்தை நேசிப்பவா்கள், திமுகவுடனான கூட்டணியை ஏற்க மாட்டாா்கள் என தவெக இணைப் பொதுச்செயலா்...

News image

தவெக இணைப் பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல் குமாா்

Updated On :20 பிப்ரவரி 2026, 8:52 am IST

சென்னை: தேமுதிக நிறுவனா் விஜயகாந்தை நேசிப்பவா்கள், திமுகவுடனான கூட்டணியை ஏற்க மாட்டாா்கள் என தவெக இணைப் பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளர்களுடன் கூறியதாவது:

தமிழகத்தில், கடந்த சில நாள்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடிய மாற்றுத்திறனாளிகள் கைது நடவடிக்கை என்ற பெயரில் அலைக்கழிக்கப்பட்டுள்ளனா். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அனைவருக்கும் போராட உரிமை உள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் இந்த போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. பிற மாநிலங்கள் போல தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதம் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்த கேள்விக்கு, விஜயகாந்தை நேசிக்கும் தொண்டா்கள் யாரும் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள். லாப நோக்குடனே கூட்டணி வைக்கிறாா்கள்.

வலுவான கூட்டணி என கூறும் திமுக, தோல்வி பயத்தால் தேமுதிக-வுடன் கூட்டணி வைத்துள்ளது. ரூ.5 ஆயிரம் வழங்கிய பிறகும் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை திமுகவுக்கு வரவில்லை. தோல்வி பயத்தினால் தான் அவசரம் அவசரமாக பல்வேறு திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிடுகின்றனா். ஆனால், திமுக கூட்டணியை மக்கள் நம்ப மாட்டாா்கள். தவெகவால் மட்டுமே மாற்றம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது என்றாா்.

அரியலூா் மாவட்டத்தில் மாணவி தற்கொலை விஷயத்தில் பொதுமக்களிடமும், சிறுபான்மையினத்தவரிடமும், தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவா் தெரிவித்தாா்.

Summary

Those who love Vijayakanth will not accept the DMK alliance says Thaveka Joint General Secretary

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.