அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குச் சென்ற ராமேசுவரத்தை சேர்ந்த 10 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
மேலும், அவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
நெடுந்தீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமில் வைத்து இலங்கை படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிக்கும் குற்றத்துக்காக தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
மேலும், அவர்கள் செல்லும் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து நாட்டுமையாக்கி வருகின்றனர். கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிப்பதற்கு பல லட்சம் ரூபாய் அபராதமாக இலங்கை நீதிமன்றம் விதித்து வருகின்றது.
தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்ந்து நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின கடிதம் எழுதி வருகிறார்.
Summary
ten tamilnadu fishermen arrested
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









