விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் நடந்த விபத்து: 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
தஞ்சாவூர் தவெக மாநாட்டில் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் ஐந்து பேர் படுகாயம் குறித்து...


தஞ்சாவூர் தவெக மாநாட்டில் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் ஐந்து பேர் படுகாயம். அதில் ஒரு இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டம் நடைபெற்று.
இந்த நிலையில், மாநாட்டிற்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக காரில் வரும் போது, அவரது வாகனத்தை இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் துரத்தி வந்தனர்.

விபத்தில் காயமடைந்த தவெக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே நின்று கொண்டிருந்த காவல்துறையினர் வாகனம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் விக்னேஷ் அவரது நண்பர் ஹிலால் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் விக்னேஷ் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிலால் என்ற இளைஞருக்கு இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று மாநாடு முடிந்து தொண்டர்கள் வீடு திரும்பிய போது வல்லம் பிரிவு சாலை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் துர்கா, கலைமணி, முத்து ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த அனைவரும் தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...