கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்!

பண்ருட்டி ஸ்ரீ பெருந்தேவி தாயர் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது குறித்து...

Panruti Varadaraja Perumal Temple Chariot

பண்ருட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம். - டிஎன்எஸ்

Updated On :

நெய்வேலி: கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஸ்ரீ பெருந்தேவி தாயர் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.

இந்த கோயிலில் இந்தக் கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் காலை சுவாமி உள்புறப்பாடு, மாலையில் இந்திர, சந்திர பிரபை, அனுமன், சேஷ, பெரிகருட, யானை மற்றும் குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. 29-ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் மற்றும் திருபல்லக்கு திருவீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் சித்திரை பௌர்ணமி நாளான வெள்ளிக்கிழமை காலை சுமார் 6 மணி அளவில் நடைபெற்றது.

இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேதராய் உற்சவர் வரதராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர், கோயில் பட்டாச்சாரியார் கஸ்தூரிரங்கன் உள்ளிட்டோர் வேத பாராயணங்கள் முழங்கி தேரோட்டத்தைத் தொடக்கி வைத்தனர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை கோவிந்தா...என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.

நாதஸ்வரம் தவில் மங்கள இசை, சிவ வாத்தியங்கள், செண்டை மேளம் வாத்தியங்கள் முழங்க தேரானது மாட வீதிகளை வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. தேர் சென்ற வழியெங்கும் நீர்மோர், குடிநீர் மற்றும் பிரசாதங்கள் பக்தர்களால் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பண்ருட்டி நகர் மன்றத் தலைவர் க.ராஜேந்திரன், தொழிலதிபர் எஸ்.வைரக்கண்ணு, எஸ்.வி.அருள், வர்த்தக சங்க நிர்வாகிகள் டி.சண்முகம், வீரப்பன், மோகன கிருஷ்ணன், ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பாதுகாக்புப் பணியில் காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்புகளை அகற்றி தேரோட்டத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

Summary

Panruti Varadaraja Perumal Temple Chariot!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.