திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப் பகுதியில் மழையின்றி வறட்சி நிலவுவதால், இங்குள்ள தலையணை ஆறு வறண்டது.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப் பகுதியில் மழையின்றி வறட்சி நிலவுவதால், இங்குள்ள தலையணை ஆறு வறண்டது. இதனால், தலையணைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை தடை விதித்துள்ளது.
களக்காடு புலிகள் காப்பகத்தில் களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பி கோயில் ஆகிய சுற்றுலாப் பகுதிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வந்ததால் தலையணை ஆறு, நம்பி கோயில் நம்பியாற்றில் எப்போதும் தொடர்ந்து நீர்வரத்து இருந்து வந்தது.
இந்த நிலையில், மலைப் பகுதியில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வறட்சி நிலவி நீர்வரத்து குறைவாக இருப்பதால் தற்போது தலையணை பச்சையாற்றில் தடுப்பணைக்கு உள்பகுதியில் குட்டை போன்று தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது.
இதையடுத்து, களக்காடு துணை இயக்குநர் மற்றும் வன உயிரின காப்பாளர் உத்தரவின்பேரில், தலையணை புதன்கிழமை(மே. 6) மூடப்பட்டது. அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். மலைப்பகுதியில் மழை பெய்தால் மட்டுமே தலையணை ஆற்றில் நீர்வரத்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு வனக்கோட்டம், களக்காடு வனச்சரகத்திற்குள்பட்ட களக்காடு தலையணை சூழல் சுற்றுலாப் பகுதியில் மே.6 முதல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்தும், பார்வையிடவும் தடை விதித்துள்ளது.
Summary
Severe Drought Forces Closure of Kalakkad Thalayani: Ban Imposed on Tourists
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

களக்காடு தலையணையில் நீா்வரத்து: குளிக்க அனுமதி

தமிழகத்தில் மயோனைஸுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

2008-க்குப் பின் பிறந்தவர்கள் சிகரெட் வாங்க வாழ்நாள் தடை!

கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடித் தடை காலம்!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு


