முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களிலிருந்து உருவாக்கப்படும் ஒருவித சாஸ் மயோனைஸ். இது மோமோஸ், ஷவா்மா, சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் உள்ளிட்ட பொருள்களுடன் வைத்து சாப்பிட பயன்படுத்தப்படுகிறது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 2025ல் மயோனைஸுடன் மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழந்த நிலையில் 15 போ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து தெலங்கானாவில் மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதிக்கப்படுவதாக கடந்த 2025 ஏப்ரலில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அந்த தடை காலம் முடிந்த நிலையில் தற்போது மேலும் ஓராண்டுக்கு அதாவது 2027 ஏப்ரல் வரை மயோனைஸுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
மயோனைஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பச்சை முட்டையால் உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்புள்ளது, குறிப்பாக சால்மோன்நெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மயோனைஸ் உற்பத்தி செய்யவும் சேமித்து வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விதிகளை மீறி மயோனைஸ் விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளா்கள் மீது உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Ban on Mayonnaise in Tamil Nadu Extended for Another Year
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

29.7.1976: த. நா. நெடுக ஊர்வலம் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை தடை செய்து புது உத்தரவு
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்! தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? பெ. சண்முகம் கேள்வி!

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay

ரசாயன நிறமூட்டி கலந்த அப்பளங்களுக்கு தடை: உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவு
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



