சென்னை, ஜூலை. 28 - ஆர்ப்பாட்டங்களுக்காக பொது ஊர்வலங்கள் நடத்துவது, பொதுக் கூட்டங்கள் நடத்துவது அல்லது கும்பல் ஆர்ப்பாட்டங்களுக்காக கூடுவது, இத்தகைய ஊர்வலம், கூட்டம் அல்லது கும்பலில் கலந்து கொள்வது எல்லாவற்றையும் தடை செய்து தமிழ்நாடு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இத்தடை உத்தரவு தமிழ்நாடு முழுதும் ஆகஸ்டு மாதம் 12 முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
திருமணம், சாவு அல்லது இதுபோன்ற குடும்ப நிகழ்ச்சி களுக்காகவோ அல்லது சமய நிகழ்ச்சிகளுக்காகவோ நடத்தப்படும் எந்த ஊர்வலத்தையும் இத்தடை உத்தரவு பாதிக்காது.
சென்ற ஆண்டில் ஜூலை 4 ஆம் தேதி யன்று அவசர நிலைப் பிரகடனத்திற்குப் பின் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவின் நீடிப்பே இது. அப்போது "மிஸா''வின் கீழ் ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டன.
இப்போதைய உத்தரவின் கீழ் ஊர்வலங்கள் மட்டுமின்றி, ஆர்ப்பாட்டங்களும், ஆர்ப்பாட்டங்களை உருவாக்குவதற்கான கூட்டங்களும் கூட தடை செய்யப்பட்டுள்ளன.
சீனாவில் 2 தடவை கடும் பூகம்பம்
பீகிங், ஜூலை 28 - சீனாவில் இது அடுத்தடுத்து இரு தடவை கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. பீகிங் நகரில் கட்டிடங்கள் சேதமடைந்தன. தலை நகருக்கும் சீனாவின் கிழக்குப் பகுதிக்கும் இடையே ரயில், டெலிபோன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
சீனாவின் கிழக்குப் பகுதியில், ஹோபே மாநிலத்தில், டாங்ஷான் என்ற தொழில் நகரத்திற்கு ஒருசில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஓர் இடத்தை இந்தப் பூகம்பம் மையமாகக் கொண்டிருந்தது.
பூகம்பம் நிகழ்ந்த பகுதிகளில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து இன்னும் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை.
கடந்த 12 ஆண்டுகளில் உலகத்தின் எந்தப் பகுதியிலும் இவ்வளவு கடுமையான பூகம்பம் ஏற்பட்டதில்லை என்று கொலரா டோலில் உள்ள அமெரிக்க பூதத்துவ ஆராய்ச்சி நிலையம் கூறியது.
மழையில் ஊறிய பெரிய அகதிகள் முகாம் போன்று இன்று பீகிங் காட்சி அளித்தது. மறுபடியும் நில நடுக்கங்கள் ஏற்பட்டு விடக்கூடும் என்ற அச்சத்தில், மக்கள் தெருக்களிலேயே தங்கிவிட்டனர். பீகிங் நகரில் உள்ள 60 லட்சம் மக்களும் இவ்வாறு தெருக்களில்தான் முகாமிட்டிருக்கிறார்கள்.
சீன நேரப்படி அதிகாலை 3.45 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவு 1.15 மணிக்கு) பூகம்பம் ஏற்பட்டது.
2-வது பூகம்பம்
கோல்டன் (கோலராடோ) ஜூலை. 28 - சீனாவில் இன்று அதிகாலையில் பூகம்பம் ஏற்பட்ட அதே பகுதியில், மீண்டும் கடுமையான பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க பூதத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்தது.
இந்த இரண்டாவது பூகம்பம் டாங்ஷன் நகருக்கு அருகே ஏற்பட்டது. சீன நேரப்படி காலை 7-25 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4-4 15 மணி) இரண்டாவது தடவையாக பூகம்பம் ஏற்பட்டது. ...
Summary
29.7.1976: New order banning processions, meetings, and demonstrations across Tamil Nadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

25.7.1976: தமிழ்நாட்டில் மின்சார வெட்டு 25% லிருந்து 30% வரை நாளை முதல் அமல்

18.7.1976: தற்காலிக உத்தியோகங்களை நிரந்தரமாக்கும் விஷயம்: தமிழக அரசு புது உத்தரவு

ரசாயன நிறமூட்டி கலந்த அப்பளங்களுக்கு தடை: உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவு

29.6.1976: த. நா. அரசு கார்கள் பெட்ரோல் உபயோகக் கட்டுப்பாடு: ஜூலை 1-ந்தேதி முதல் அமல்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi




