தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு மது கடைகளை மூட அரசு முன் வருமா? என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் என்பது தேவையான ஒன்றுதான். முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்ட அடுத்த நிமிடமே போதைப்பொருளை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டு இருப்பதை வரவேற்கின்றோம்.
அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளும் மேற்கொண்டு இருப்பதாக அறிகின்றோம் மகிழ்ச்சி.
போதைப்பொருள் பட்டியலில் மதுவையும் சேர்ப்பதற்கு அரசு முன்வருமா?, போதைப்பொருள் ஒழிப்பு என்றால் மது விற்பனை நடக்கக்கூடிய மது கடைகளும் மூடப்படுமா?
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் பெண்கள் அதிகமாக ஆளுங்கட்சிக்கு வாக்களித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
வாக்களித்த பெண்கள் விரும்புகிற மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? தமிழகத்தில் அதிகமான மக்கள் போதைக்காக பயன்படுத்துகின்ற பொருளாக மது கடைகளில் விற்கின்ற மதுவாக இருக்கிறது.
மது கடைகளின் கிளைகளாகத்தான் மற்ற போதைப்பொருள்கள் விற்கப்படுவதாக தெரிகிறது.
மது கடைகள் மூடப்பட்டால் அரசு எதிர்பார்க்கிற அனைத்து போதைப்பொருள்களுடைய நடமாட்டமும் நின்றுவிடும்.
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு மது கடைகளை மூட அரசு முன் வருமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Summary
Does the Eradication of Narcotics Mean Liquor Shops Will Also Be Closed?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 1-இல் மதுபான கடைகளை மூட உத்தரவு

இன்றுமுதல் 4 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகளை மூட அறிவுறுத்தல்

தோ்தலை முன்னிட்டு வெடிபொருள் விற்பனை கடைகளை மூட உத்தரவு

திருப்பூா் மாவட்ட எல்லையில் மதுக் கடைகளை இன்றுமுதல் 3 நாள்கள் மூட உத்தரவு
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை


