புது தில்லி: தமிழக முதல்வராக தவெக தலைவர் சி.ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது இன்ஸ்டாவில் சில புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த நிலையில், அந்த பதிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டப்பட்டிருந்தது.
இதனிடையே, ராகுல் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்த புகைப்படங்கள் முடக்கப்பட்டுள்ளதற்கு தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மறுத்துள்ளது. சமூக ஊடகத் தளம் எடுத்த இந்த நடவடிக்கையில் அமைச்சகத்திற்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் அது தெளிவுபடுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் முதல்வராக தவெக தலைவர் சி.ஜோசப் விஜய் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். விஜய் பதவியேற்பு விழாவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் வருகை தந்திருந்தார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் விஜய்க்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணத்தையும் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் செய்து வைத்தார்.
இந்த விழா நிகழ்ச்சியில் ஆளுநர் புறப்பட்டு சென்ற பிறகு முதல்வர் விஜய் ராகுலுடன் இணைந்து செல்பி, காணொளி எடுத்தார். அதேபோல, பதவியேற்புக்கு முன்பாக நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ராகுல் காந்தியை ஜோசப் விஜய் சந்தித்து உரையாடினார்.
ராகுலுக்கு கை குலுக்கி சால்வை அணிவித்த ஜோசப் விஜய் சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது மேடையில் விஜய்யுடன் பேசியது தொடர்பான காணொளிகளை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த பதிவு ஒரு மணி நேரத்திற்கும் குறைவான காலத்தில் இணையத்தில் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. அதேவேளையில் வைரலான அந்தப் புகைப்படப் பதிவு 46 மில்லியன் மக்களைச் சென்றடைந்தது.
விஜய்- ராகுல் சந்திப்பு புகைப்படப் பதிவு ஒரு மணி நேரத்திற்குள் 46 மில்லியன் மக்களை அடைந்தது. ஆனால், ரீல்ல்ஸ் காணொளியை இன்ஸ்டாகிராம் முடக்கியுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இன்ஸ்டகிராம் அந்த பதிவை முடக்கியது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டையும் ராகுல் காந்தி தனது இன்ஸ்டாவில் ஸ்டோரீஸ் ஆக பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தேசியப் பிரசாரப் பிரிவுத் தலைவர் ஸ்ரீவத்ஸா 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டிருந்த ஒரு பதிவில், ராகுல் காந்தி-விஜய் சந்திப்பின் 'ரீல்ஸ்' பதிவு ஒரு மணி நேரத்திற்கும் குறைவான காலத்தில் 12 மில்லியன் பார்வைகளைப் பெற்றதாகவும், அதேவேளையில் வைரலான அந்தப் புகைப்படப் பதிவு 46 மில்லியன் மக்களைச் சென்றடைந்ததாக குறிப்பிட்டவர், நாட்டில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் குரல்களை அமைச்சகம் தீவிரமாகக் கட்டுப்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
"முதல்வர் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தளபதி விஜய்யும் இடம்பெற்றிருந்த ரீல்ஸ் மற்றும் புகைப்படப் பதிவை இன்ஸ்டாகிராம் முடக்கியுள்ளது. வைரலான அந்த ரீல்ஸ் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 1.2 கோடி பார்வைகளையும், வைரலான புகைப்படப் பதிவு ஏற்கனவே 4.6 கோடி மக்களையும் சென்றடைந்துள்ளது. அவரது கணக்கை ஏன் அணுக முடியவில்லை என்பதற்கு மெட்டா எந்தக் காரணத்தையும் குறிப்பிடவில்லை. இந்த 'தொழில்நுட்பக் கோளாறு' விதிகளால்தான் ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் சமூக ஊடகக் கணக்குகள் நீண்ட காலமாகவே முடக்கப்பட்டுள்ளன. அவரது எக்ஸ் ரீச், யுடியூப் பார்வையாளர்கள், இன்ஸ்டா பின்தொடர்பவர்கள் என அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இப்படித்தான் இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது" என்று ஸ்ரீவத்சா பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மறுப்பு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இன்ஸ்டாவின் சில பதிவுகள் மத்திய மின் மற்றும் தகவல் தொழில் நுடபத்துறை விதிகளால் முடக்கியுள்ளதாக சில சமூக ஊடகக் கணக்குகள் தவறாகக் கூறியுள்ளன. இந்த நடவடிக்கையில் மத்திய மின் மற்றும் தகவல் தொழில் நுடபத்துறைக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. அந்தச் சமூக ஊடகத் தளத்தின் சொந்த உள் அமைப்பு, பதிவுகளைத் தவறுதலாக முடக்கப்பட வேண்டியவையாகக் குறிப்பிட்டதே இதற்குக் காரணம். தற்போது முடக்கப்பட்ட அந்தப் பதிவுகள் அந்தத் தளத்தில் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன," என்று அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
ராகுல் காந்தி மற்றும் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் ஆகியோர் இடம்பெற்றிருந்த 'ரீல்' மற்றும் புகைப்படப் பதிவை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விதிமுறைகளின் காரணமாகவே இன்ஸ்டாகிராம் "முடக்கியதாக" காங்கிரஸ் கட்சி அமைச்சகத்தின் மீது குற்றம் சாட்டியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அரசுத் தரப்புத் தகவல்கள் இந்த விளக்கத்தை அளித்துள்ளன.
முன்னதாக, தமிழகம் தனது நவீன வரலாற்றில் மிக முக்கியமான அரசியல் மாற்றங்களில் ஒன்றைக் கண்டது. நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய சி. ஜோசப் விஜய், மாநிலத்தின் 13 ஆவது முதல்வராகப் பதவியேற்றார். இதன் மூலம், பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக மற்றும் அதிமு அரசியல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, "மதச்சாா்பற்ற, உண்மையான சமூக நீதி"யைக் கொண்ட புதிய அரசின் அத்தியாயம் தொடங்குகிறது என்றாா் விஜய்.
ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்ய, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களுக்குப் பதவி மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வராக ஆற்றிய தனது உணர்ச்சிப்பூர்வமான முதல் உரையில், விஜய் தனது எளிமையான பின்னணியை மீண்டும் மீண்டும் எடுத்துரைத்து, தன்னைச் சுற்றியுள்ள எந்தவொரு பிரம்மாண்டமான அரசியல் பிம்பத்தையும் நிராகரித்தார். நான் ஏதோ தெய்வீகத் தூதரோ அல்லது தீர்க்கதரிசியோ அல்ல. "திரைப்படத் துறையில் ஒரு சாதாரண உதவி இயக்குநரின் மகனாக இருந்த எனக்கு, வாழ்க்கையில் வறுமை, பசி என்றால் என்னவென்று தெரியும். நான் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனிதன். உங்கள் குடும்பத்தில் ஒருவன். என்னை அப்படி நினைத்ததால்தான், வெற்றி பெறவைத்துள்ளீா்கள். பொய்யான வாக்குறுதிகளால் நான் உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன்." "சாத்தியமானதை மட்டுமே நான் வாக்குறுதியாக அளிப்பேன்," என்று அவர் காதைப் பிளக்கும் கரவொலிக்கிடையே கூறினார்.
தனக்காக ஆர்வத்துடன் பிரசாரம் செய்த இளம் வாக்காளர்களுக்கும் குழந்தைகளுக்கும் நன்றி தெரிவித்த விஜய், இந்த விஜய் மாமாவின் குட்டி நண்பா, நண்பிகளுக்கு ஒரு சிறப்பு நன்றி. அவா்களால்தான் இவையெல்லாம் நடந்திருக்கின்றன. அவா்களின் எதிா்காலத்துக்காக திட்டங்களை நிறைவேற்றுவேன். "நம்பிக்கையுடன் இருங்கள் -- இந்த விஜய் மாமா எப்போதும் உங்களுக்காகத் துணையாக இருப்பார்." இந்த வாசகம், இணையத்தில் நடைபெற்ற அந்த விழாவின் மிக முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக உடனடியாக மாறியது. தவெக தோழா்களுக்கு நன்றி. வாருங்கள் அனைவரும் சோ்ந்து ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவோம். மதச்சாா்பற்ற, உண்மையான சமூக நீதியைக் கொண்ட புதிய அரசின் அத்தியாயம் தொடங்குகிறது என்றாா் விஜய்.
Summary
IT Ministry denies involvement in blocking Rahul Gandhi's reel, photo featuring Vijay oath taking ceremony
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி!
டிரம்ப்புக்கு மோடி; அதுபோல தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு கூட்டாளி முதல்வர் தேவை! ராகுல் பேச்சு
மோடி ஒரு மாயாஜாலக்காரர்! ஆபரேஷன் சிந்தூர் போன்ற வித்தைகளை செய்தவர்! ராகுல் பேச்சு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை


