விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்.
தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை (மே 10) காலை 10 மணிக்கு பதவியேற்பார் என ஆளுநர் மாளிகை இன்று (மே 9) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் விஜய்க்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
விஜய்யுடன் சேர்ந்து 9 அமைச்சர்களும் நாளையே பதவியேற்பார்கள் என தவெக வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
நாளையே விழா நடத்த வேண்டும் என்று விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஆட்சியமைக்க 118 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில் 120 பேரின் ஆதரவு கிடைத்ததால் தமிழ்நாட்டின் முதல்வராகிறார் விஜய்.
Summary
Mallikarjun Kharge and Rahul Gandhi to participate in Vijay's swearing-in ceremony.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அபுதாபியில் நீட் மறுதேர்வா? குழந்தைகளின் எதிர்காலத்தில் விளையாட வேண்டாம்: ராகுல்

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!
முதல்வர் விஜய் - ராகுல் சந்திப்பு நடைபெறாதது ஏன்?

கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



