கடந்த 2 வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 4ஆவது முறையாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன; லாபத்தை பகிர்ந்துகொள்வத்தில் என தெரிவித்துள்ள காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், 2024 ஆம் நிதியாண்டில் ஈட்டிய ரூ.81,000 கோடி லாபம் எங்கே போனது என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்காசிய போரின் எதிரொலியாக, ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்தும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்தாா்.
அதைத் தொடா்ந்து, பெட்ரோல்-டீசல் விலை அடுத்தடுத்து மூன்று முறை உயா்த்தப்பட்ட நிலையில், கடந்த 2 வாரங்களில் 4 ஆவது முறையாக இன்றும்(திங்கள்கிழமை) பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 2.46 வீதமும் , டீசல் லிட்டருக்கு ரூ. 2.57 வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 10 நாள்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 7.2, டீசல் ரூ7.38 என்ற அளவு உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன; லாபத்தை பகிர்ந்துகொள்வத்தில் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
இன்று எண்ணெய் வணிக நிறுவனங்கள் டீசல் லிட்டருக்கு ரூ.38 நஷ்டம் அடைகிறோம் என்கிறார்கள். அப்போ அந்த ரூ.81,000 கோடி எங்கே போனது?
ஐஓசி + பிபிசிஎல் + ஹெச்பிசிஎல் ஆகிய நிறுவனங்கள் மக்கள் லிட்டருக்கு ரூ.100-க்கு மேல் கொடுத்தபோது 2024 நிதியாண்டில் பதிவு செய்த சாதனை லாபம் ரூ.81,000 கோடி எங்கே போனது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 7 காலாண்டுகளாக எண்ணெய் வணிக நிறுவனங்கள் லாபம் ஈட்டி வந்தன. ஆனால், நுகர்வோருக்கு ஒரு பைசா கூடக் அதன் பலனைக் கொடுக்கவில்லை.
2016-இல் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தபோது அவர்கள் கலால் வரியை ஒரு லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி, அதை அப்படியே தக்க வைத்துக் கொண்டனர்.
2024 நிதியாண்டில் எண்ணெய் வணிக நிறுவனங்கள் சாதனை லாபம் ஈட்டியபோதும், விலைகள் உயர்வாகவே இருந்தன.
2026-இல் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தவுடன் - சில நாள்களிலேயே விலைகள் உயர்த்தப்பட்டன. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தங்களின் 7 காலாண்டுகளாக லாபத்தை மக்களுளுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால், தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை மட்டும் அடுத்த 7 நாள்களிலேயே மக்கள் மீது சுமத்திவிட்டன. நஷ்டம் மக்களை வந்தடைகிறது. லாபம் அவர்களிடமே தங்கிவிடுகிறது.
இதைத்தான் மோடி “நுகர்வோரைப் பாதுகாப்பது” என்று அழைக்கிறாரா? மோடி பெருநிறுவனங்களுக்காகவே வேலை செய்கிறார் என்பது இதன்மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
2014 இல் கச்சா எண்ணெய் பீப்பாய் 114 டாலர் → பெட்ரோல் விலை ரூ.72
2016 இல் கச்சா எண்ணெய் பீப்பாய் 27 டாலர் → பெட்ரோல் விலை ரூ.64
2026 இல் கச்சா எண்ணெய் பீப்பாய் 97 டாலர் → பெட்ரோல் விலை ரூ.103 ஆக உள்ளது சிந்திக்கத்தக்கது.
Summary
OMCs didn’t share profits for 7 quarters. But passed losses in 7 days. Modi works for corporates PROVED AGAIN.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயா்வு: 5 நாள்களில் இரண்டாவது முறை

தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலைகள் அதிர்ச்சி தருமா? அதுவும் ரூ.18, ரூ.35 வரை!!

எரிபொருள் விலை முடக்கம்: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18, டீசலுக்கு ரூ.35 இழப்பு!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



