2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... தட்டிக் கேட்க தயங்குறது ஏன்? - தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

வள்ளுவருக்கு காவிச் சாயம் அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி குறித்து...

udhayanidhi stalin condemns governor

திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... தட்டிக் கேட்க தயங்குறது ஏன்? - எக்ஸ்

Published On :

சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் தான் முதல்வர் ஜோசப் விஜய் மௌனமாக இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவிச் சாயம் அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் உதியநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற திருவள்ளுவர் திருவிழா நிகழ்வில் காவி உடையணிந்த திருவள்ளுவர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய புகைப்படங்கள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில்,

எப்போதுமே மௌனத்தில் இருக்கரவர் முதல்வரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவிச் சாயம் பூசி இருக்காங்க.

தமிழ்நாடு அரசு ஜனவரி மாதத்தில் திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது. ஆனால், வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?

திமுக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டித்தோம். சங்கிகளை திருத்துனோம்.

இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க.

வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் சோஃபா மாதிரி அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட அனுமதி கொடுங்கன்னு தில்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதல்வர் பயந்து நடுங்கக் கூடாது.

சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் தான் முதல்வர் மைச்சர் மௌனமாக இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவிச் சாயம் அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? என கூறியுள்ளார்.

Summary

Thiruvalluvar Smeared with saffronizing Once Again... Why the Hesitation to Object? — Udhayanidhi Stalin Questions the Tamil Nadu Government!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.