மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது பற்றி...

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சூரசம்ஹார நிகழ்வை நேரில் கண்டு களித்தனர்.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை முருகன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று பல்வேறு முருகன் கோயில்களில் விமரிசையாக நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைக் காண்பதற்காகக் கோவை மட்டுமின்றிச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைப் புரிந்தனர்.
குறிப்பாக, சஷ்டி விரதம் இருக்கும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து, படிக்கட்டுகள் வழியாக மலைக்கோயிலுக்குச் சென்று சூரசம்ஹார நிகழ்வை நேரில் கண்டு களித்தனர். சூரசம்ஹாரம் மற்றும் நாளை நடைபெறும் திருக்கல்யாண நிகழ்வை முன்னிட்டு, பக்தர்களின் வாகனங்கள் மலைக்கோயிலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டு, பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாக அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம், கோயில் நிர்வாகம் தரப்பிலும் சிறப்புப் பேருந்துகள் மலைக்கோயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர். பொதுமக்களின் நலனுக்காகப் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே தற்காலிகக் கழிவறை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சூரசம்ஹார நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து, சூரசம்ஹார நிகழ்விலும் பங்கேற்று, கோயில் நிர்வாகிகளுடன் இணைந்து சூரனை வதம் செய்தார்.
சூரசம்ஹார நிகழ்வைத் தொடர்ந்து அனைத்துப் பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Summary
The Soorasamharam ceremony was grandly celebrated at the Marudhamalai Subramanya Swamy Temple in Coimbatore. Thousands of devotees visited and witnessed the Soorasamharam event in person.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


