நாம் வாழும் இந்த கலியுகத்தில் மர்மமான மாயகெட்டசக்திகள், மயக்கும் சுற்றுப்புறம் மற்றும் அனைவரது அறியாமை, அகங்காரங்கள் போன்றவை பெருகி வருகின்றன. அது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக பாதித்து வருவது உண்மையே! நம்முடைய பெற்றோர்கள், ஞான குருக்கள் ஆகியோர் தான் கண்முன் வாழும் தெய்வீகமானவர்கள். அதுவே பிரபஞ்ச சக்தி வழிகாட்டி ராஜகோபாலன் பத்ரி நாராயணன் கண்ட உண்மை.
பொதுப்புத்தியில் மக்களுக்கு எல்லா விஷயத்திலும் கவர்ச்சி பிடித்துவிடும். நல்லவர்களின் பேச்சு பிடிக்காது. ஒன்றுமே சரியாகத் தெரியாது, ஆனால் எல்லாம் தெரிந்தது போன்றே பாவனையில் பலர் வாழ்கிறார்கள். பாவனைகள் ஒருபோதும் உண்மையாகாது. பல தவறுகளை தெரிந்தே செய்கிறார்கள். பெரும்பான்மையானவர்கள் உண்மை நிலை மறந்து போலியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையால், ஆசையாக திருமணம் செய்துகொண்டாலும் நாளாவட்டத்தில் வெறுப்பாக வாழத் தொடங்கிவிடுகிறார்கள். தெய்வீகமாகப் பிறந்த குழந்தைகள் தான் அனைவருமே, ஆனால் சூழல் காரணங்களாலும் தெளிவில்லாத பாதைகளினாலும் பெற்றோர் கண்முன்னேயே பல பாதிப்புக்களுக்கு உள்ளாகிவிடுகிறார்கள். இந்த நிலையில் இருந்து காக்கும் சக்தியை அறிந்தால் அனைவரும் ஆனந்தமாக வாழலாம்.
கண்முன் வாழும் தெய்வங்கள்:
தாய்: முதலில் கண்கண்ட தெய்வமாகிய தாயைப் பற்றி பார்ப்போம். திருமணத்திற்கு முன்பு தனக்காக வாழ்ந்துக் கொண்டு இருக்கும் இளம்பெண் திருமணம் முடிந்த முன் குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்கிறாள். அதன் பின் அவளுடைய குணநலன்களில் பல மாற்றங்கள். தன்னுடைய குழந்தைக்காக தன் பொழுதுப்போக்கு, தனிப்பட்ட ஆசைகள் என அனைத்தையும் துறந்து, அவமானம், பயம், வலி போன்றவற்றை குழந்தையின் நலனையே மகிழ்ச்சியாக ஏற்று வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறாள். அந்த தாயின் தெய்விகத்தை உணராத பிள்ளைகள் எத்தனைக் கோவில்கள் சென்றாலும் தெய்வத்தின் அருள் பெற முடியாது! (அந்தத் தாயே பாதிக்கப்பட்டு இருந்தால், காப்பாற்றுவது நல்லவர்கள் வேலை). தன் தாய் மேல் உண்மையான அன்பு உள்ள அனைத்து குழந்தைகளும், அவளின் 90% தெய்விகத்தை உணர வரவேண்டிய ஒரே இடம் ஸ்ரீ மகாமாயி காஸ்மிக் மந்திர் @ GSPY.
தந்தை: குடும்பத்தை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நன்றாக உழைத்தப்படி, ஒழுக்கத்தையும், பாதுகாப்பையும் முன்னிருத்தி வழிகாட்ட நினைக்கும் தந்தையை யாரும் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. தந்தையை சரியாகப் புரிந்து மதிக்காத பிள்ளைகளை எந்தக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது. (தந்தையே பாதிக்கப்பட்டு இருந்தால், அந்த குழந்தைக்கு அதைவிட கொடுமை எதுவும் இல்லை). ஏழையாக, படிக்காதவர்களாக இருந்தாலும் பெற்றோர்களின் அன்பு மட்டும் உண்மையே. குடும்பத்தில் தெய்விகத்தைக் காண வேண்டும் என்று நினைப்பவர்கள் உடனே வரவேண்டிய ஒரே இடம் ஸ்ரீ மகாசக்தி காஸ்மிக் மந்திர் @ GSPY.
தெய்விக அன்பு மிக்க நல்லவர்கள்: அதே போல் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் தெய்வம் போல் உதவிடும் சகோதர-சகோதரிகள், கணவன்-மனைவி, நண்பர்கள், உற்றார்-உறவினர்கள் போன்றவர்களின் செய்நன்றியை மறப்பது கடவுளை நிந்திப்பதற்கு சமம். சமூக ரீதியாக பார்க்கும் போது இந்த உலகத்தில் எத்தனை கெடுதல்கள் நடந்துக்கொண்டு இருந்தாலும் பல நல்லவர்கள் தனிமனிதனாகவும், மற்றும் அவர்கள் வேலை செய்யும் துறைகள் மூலமாகவும் சமுதாய நலனுக்காக அல்லும் பகலும் உழைத்து வருகிறார்கள். அந்த மனித தெய்வங்களை மதிக்காமல் தெய்வத்தை உணரவே முடியாது.
எனவே 1] ஆனந்தமாக வளரும் சிறு குழந்தைகள், 2] கள்ளக்கபடமற்ற சிறுவர் சிறுமியர் 3] நம்பிக்கையுடன் வெற்றிப்பெற நினைக்கும் கன்னிப்பெண்- இளைஞர்கள் 4] மகிழ்ச்சியான குடும்பவாழ்க்கை வாழ நினைக்கும் சுமங்கலி பெண்கள் 5] நிம்மதியாக வாழவிரும்பும் வயதானோர்கள் என அனைவரின் விருப்பத்தையும் நிறைவு செய்யும் சக்தி இந்த உலகத்திலேயே பிரபஞ்ச அன்பு நிறைந்து ததும்பும் ஸ்ரீ மகாமாயி காஸ்மிக் மந்திரில் உள்ளது. நாம் அனைவரும் ஒரே பிரபஞ்சத்தாயின் குழந்தைகள், அனைவரிடமும் பலசக்திகள் உள்ளன. நமது முதல் சக்தி அன்பு, அன்பு இல்லாமல் தெய்வம் இல்லை. பல தீயசக்திகள் உள்ள உலகில் கண்முன்வாழும் தெய்வீகமாக அமைந்துள்ளது ஸ்ரீ மகாமாயி காஸ்மிக் மந்திர் குருஜி சத்யபிரணவயோகி, போன் 9500064319 / 9789893015. அனைவரும் ஸ்ரீமகாமாயி சர்வ ஆத்மரட்ஷகியின் முழு அருளால் அஷ்ட ஐஸ்வர்யம், சர்வ மங்களம், சௌபாக்யம், ஆரோக்யம், ஆனந்தம், ஞானம், தெய்விக அன்பு பெற்று வாழ பிரார்த்திக்கிறேன். அனைவரின் நலனுக்காக வாழும் தெய்வீகமானவர்களின் பாதங்களை நமஸ்கரிக்கிறேன்.
ராஜகோபாலன் பத்ரிநாராயணன். தொலைபேசி 95515 55898
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.