மான்சூன் வெட்டிங்

இது ஒரு திரைப்படத்தில் பெயர். உண்மையில் இப்போது மழை சீசனில்  தூறல் மழை நாளன்று திருமணத்தை
Updated on
2 min read

மான்சூன் வெட்டிங்! இது ஒரு பிரபல திரைப்படத்தில் பெயர். உண்மையில் இப்போது மழை சீசனில்  தூறல் மழை நாளன்று திருமணத்தை நடத்துவது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. திருமண தினத்தில் மழையைத் தடையாகப் பார்த்த காலங்கள் மலையேறி, மழையை திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக்கிவிட்டது நிஜம். மழையில் திருமணம் நடத்த முன்கூட்டியே சரியான திட்டமிடல் மிகவும் முக்கியம் என்கிறார் ஒரு நிபுணர்.

ராஸ் லக்ஸுரி வெட்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுருச்சி ஜோஷி மழைக்காலத்தில் திருமண ஏற்பாடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களையும் கட்டாயம் தவிர்க்க வேண்டிவற்றையும் விளக்குகிறார் (Dos and Donts). அவை

மனத்தில் கொள்க – Dos
திருமணத்திற்கு சில தினங்கள் முந்தைய அழகான மழை நாளொன்றில்  விருந்து மற்றும்  நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டும்.

பீன் பேக் (Bean Bag)  போல எளிதில் ஏறக்கட்டக் கூடிய இருக்கைகளை தயாராக வைத்திருக்க வேண்டும்.

மழையில் நனைந்தாலும் கரைந்து போகாத மேக் அப் பொருட்களைப் பயன்படுத்தி அழகுக் கலை நிபுணர் மணமக்களை அலங்கரிக்க வேண்டும்.

திருமண அழைப்பிதழில் ஆரம்பித்து அனைத்து விஷயங்களிலும் மழை கான்செப்டை நினைவில் வைத்து அதற்கேற்ப டிசைன் செய்ய வேண்டும். மான்சூன் வெட்டிங் என்ற நிகழ்வை விசேஷமாக்கும் வகையில் ஒவ்வொரு நிகழ்விலும் செயல்படவேண்டும்.

மழை சீசனுக்கு ஏற்ற வகையில் உடைகளின் நிறங்கள் இருக்க வேண்டும். ரோஸ், பின்க், கோல்டன் மற்றும் சிவப்பு நிறங்கள் இந்த சீசனுக்கு ஏற்றவை.

திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தியவர்களுக்கு  இந்த சீசனுக்கு ஏற்ற பரிசாக  வண்ண வண்ண குடகளைத் தரலாம். அல்லது வளையல், சன் ஷேட் போன்றவற்றையும் பரிசளிக்கலாம்.

விருந்தினர்களின் செல்போன்கள் மற்றும் உடைமைகள் மழையில் நனைந்து பழுதடைந்துவிடாமல் இருக்க தகுந்த ப்ளாஸ்டக்ி உறைகளை அல்லது வாட்டர் ஃப்ரூஃப் பைகளைத் தந்துவிடவேண்டும்.

தவிர்க்க வேண்டியவை (Dont's)

அடர்த்தியான மேக் ஓவர் செய்யக் கூடாது.

வெளிர் நிறங்கள் வேலைக்காகாது!

பூ அலங்காரங்கள், கோலங்கள் சரிப்படாது. செயற்கை பூக்கள் கொண்டு அலங்கரிக்கலாம்.

பெண்கள் ஹீல்ஸ் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

எளிமையான நகைகள் அணிய வேண்டும்.

மெஹந்தி நிகழ்விற்கு தலை நிறைய பூக்கள் வைக்க வேண்டாம். ஜடை பின்னல் போதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com