புகை பழக்கத்தை மறக்க தியானம்!

புகை பழக்கத்தை மறக்க தியானம்!
Updated on
1 min read

நீங்கள் புகை பிடிப்பவரா? அந்த பழக்கத்தை விட்டுவிட நினைக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு அபரிமிதமான சுயகட்டுப்பாடு வேண்டும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அந்த ஆய்வு மேலும் என்ன சொல்கிறது என்றால், சுயகட்டுப்பாட்டை அதிகரிக்க உதவும் தியானம், மனகுவிப்பு போன்ற பயிற்சிகள் ஆழ்மனதூண்டுதலினால் தூண்டப்பட்டு அந்த போதையின் பக்கம் ஈர்க்கப்படுவதில் இருந்து நம்மை தடுப்பதற்கு பெரிதும் உதவுகின்றன. டெக்ஸாஸ் டெக்னிகல் யுனிவர்சிடி மற்றும் ஒரேகான் யுனிவர்சிடி ஆராய்ச்சியாளர்கள் 60 இளங்கலை மாணவர்களை இந்த ஆய்விற்காக ஏற்பாடு செய்து, இந்த ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உடலில் உள்ள கார்பன்டை ஆக்சைடின் அளவு தேவையான சோதனைகளின் மூலம் கண்டறியப்படுகிறது. பின்னர், அவர்களுக்கு உடல்-மனம் சார்ந்த ரிலாக்சேஷன் பயிற்சி வழங்குகிற பயற்சிகளில் முதலில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள்.

மாணவர்களை பின்னர் இரண்டு குழுக்களாக பிரித்திருக்கிறார்கள். அதில் ஒரு குழுவிற்கு தியான பயிற்சி அளித்திருக்கிறார்கள்.

இரண்டு வாரம் இந்த பயிற்சி தொடர்ந்திருக்கிறது. தினமும் 30 நிமிடம். இந்த பயிற்சிக்கு பின் ஐந்து மணி நேரம் கழித்து, அவர்களிடம் அவர்களின் மூளை ஸ்கேன் போன்ற ரிப்போர்ட்டுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

அதன்மூலம் தெரிய வந்த்து என்னவென்றால், அவர்கள் எப்போதும் புகைக்கிற அதே அளவிலேயே சிகரெட் பிடித்திருந்தாலும், தியானத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் உடலில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடின் அளவு 60 சதவீதம் முன்பு இருந்ததைவிட குறைவாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் புகை பிடிக்கிற பழக்கத்தில் சில மாற்றங்கள் கொண்டு வந்திருப்பது தெரிய வந்த்தாக மனோதத்துவ துறை பேராசிரியர் யீ-யூஆன்-தாங் கூறியிருக்கிறார்.

அதில் ஒரு மாணவர் தான் 20 சிகரெட் பிடித்தாக சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் பாக்கெட்டில் சோதித்துப் பார்க்கிறபோது மீதம் 10 சிகரெட் அதில் இருந்திருக்கிறது. ஆக தியானம் அவருக்குள் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு சுயகட்டுப்பாட்டை ஆழ்மனதில் விதைத்து அதற்குரிய மாற்றங்களை அவர்களே கூட உணராதபடி நிகழ்த்தியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

ஆக மனம் குவிந்த தியானம் என்பது மனதின் சுயகட்டுப்பாட்டை வலிமை பெறச் செய்வதற்கான முக்கிய வழிமுறை என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com