அவல் - தயிர் - பூசணிக்காய்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தேவையற்ற கொழுப்புகள் கரையும். 
அவல் - தயிர் - பூசணிக்காய்

தேவையான பொருட்கள்

1. அவல் - 1/2 கிலோ

2. தயிர் - 2 லிட்டர்

3. குடை மிளகாய் - 3

4. பூசணிக்காய் - 1

5. கொத்தமல்லிதழை - தேவைக்கேற்ப

6. மிளகு - தேவைக்கேற்ப

7. உப்பு - தேவைக்கேற்ப

8. திராட்சைப்பழம் மற்றும் மாதுளை முத்துக்கள் - சிறிதளவு

செய்முறை

  • பூசணிக்காயில் விதைகளை நீக்கிவிட்டு சாறு பிழிந்து கொள்ளவும்.

  • குடைமிளகாயையும் கொத்தமல்லிதழையையும் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.

  • மிளகை பொடித்துக் கொள்ளவும்.

  • பூசணிக்காய் சாறுடன் அவல், தயிர், நறுக்கியகு டைமிளகாய்,கொத்தமல்லி மற்றும் பொடித்து வைத்திருக்கும் மிளகு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

  • சுவைக்கேற்ப விதைகள் நீக்கிய திராட்சையையும் மாதுளை முத்துக்களையும் சேர்த்துக்கொள்ளவும்.

உண்பதால் ஏற்படும் பயன்கள்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தேவையற்ற கொழுப்புகள் கரையும். நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. உடல் சூடு தணியும். வயிற்றுப் பிரச்சனை நீங்கும். வெயில் காலத்திற்கு சிறந்ததாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com