தியானம், யோகா என்பது உலகமறிந்த, மிகப் பழமையான மன, உடல் பயிற்சியாகும். ஆன்மாவின் முக்கிய சக்திகளாகிய மனம், புத்தியை பிரபஞ்சத்தின் உன்னத சக்தியான இறைசக்தியுடன் ஆழ்ந்த அன்புடன் இணையச் செய்வதே இப்பயிற்சியின் அணுகுமுறை.
எப்போது தியானிக்கலாம்?
அதிகாலை மிக நல்லநேரம். அது தவிர உணவருந்தும் போது, நாள் முழுவதும், இரவு உறங்கும் முன் என எப்போது வேண்டுமானாலும் தியானிக்கலாம்.
எங்கே தியானம் செய்யலாம்?
உகந்த இடம்?
இந்த முழு உலகமே நீங்கள் இயற்கையோடு இணைந்து, அந்த ஒருவரோடு தியானம் செய்வதற்கான சிறந்த இடங்களை அளித்துள்ளது. அது சூரிய ஒளி பரவியிருக்கும் கடற்கரையாகவோ, புனிதமான நதிக்கரையாகவோ, மருத்துவமனையின் காத்திருப்பு அறையாகவோ, நகராட்சி பூங்காவின் பரந்த புல்வெளியாகவோ இருக்கலாம். ஆக, அமைதியில் ஆழ்ந்திட எந்த இடமும் பொருத்தமே.
வீட்டிலும்…
இதற்கு என விசேஷமான அறையோ, குறிப்பிட்ட இடமோ தேவையில்லை. ஏதேனும் அமைதியான மூலை, அல்லது வசதியான ஒரு நாற்காலி கூட போதும்.
இதே இடத்தில் தொடர்ந்து பயிற்சி செய்வதன் காரணமாக குறுகிய காலத்தில் உங்களது அமைதி சக்தியின் அதிர்வலைகள் நிறைந்து வழியும் ஓர் அற்புத இடமாக மாறுவதை காண்பீர்கள்.
கூட்டத்திலும் அமைதியாக….
உங்களுக்குள்ளேயே (மனத்தில்) ஓர் அமைதியான அறையை உருவாக்க கற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அதனுள் சென்று தியானிக்கலாம். நீங்கள் மக்கள் கூட்டத்தின் நடுவிலும் பரபரப்பான ஆரவாரமான சூழ்நிலையிலும் கூட இவ்வுலகின் மிக அமைதி நிலவும் இடமான உங்கள் மனத்தின் அறையில் சென்று அமர்ந்துவிடுங்கள்.
பணியிடத்திலும்….
நாம் வேலை செய்யும் இடத்தில் தியானம் செய்வதற்கான இடம் கிடைத்தால், அது சாலச் சிறந்தது. உங்களின் புதுமையான சிந்தனை இதற்கான ஆதாரமாகும். இருக்கையில் அமர்ந்தவாறே கூட ஆழ்மன அமைதியின் அதிர்வலைகளை உணரலாம். கோப்புகளைக் கையிலெடுத்துக் கொண்டு அலுவலகத்தில் இங்கும் அங்கும் செல்லும் போதும் அடி மனத்தின் ஆழ்ந்த அமைதியை அனுபவிக்கலாம்.
தனிமையிலா? குழுவிலா?
நீங்கள் மற்ற அனைத்து சிந்தனைகளிலிருந்து விலகி அந்த மேலான ஒருவரது துணையில் (எண்ணங்களால்) இணைந்திருக்கும் போது ஆத்மாவின் மிக உன்னதமான தியான அனுபவம் நிகழும்.
மேலும் பிறரோடு சேர்ந்து யோகா (கூட்டு தியானம்) செய்ய வேண்டுமெனில், பிரம்மா குமாரிகளின் தியான நிலையங்களில் அமைதியின் ஆழ்ந்த அனுபவத்தை பெறலாம்.
பயணத்திலும்….
நடந்தோ, ஊர்தியிலோ, ரயிலிலோ பயணம் செய்யும் போது உங்களின் உள்மனத்தின் புதைந்து கிடக்கும் ஆழ்ந்த அமைதியை உணரலாம்.
கண்களைத் திறந்து கொண்டே தியானிக்கும் ராஜயோகமானது நம்முடைய நடைமுறை வாழ்வில் செயல்படுத்த ஏதுவானதுஎன்பதை எளிதில் உணரலாம்.
யாரெல்லாம் தியானம் செய்யலாம்…
தியானத்தின் பலனை அடைய விரும்புகின்ற எவரும், தியானம் செய்யலாம். ஒரு சிலர் அவ்வப்போது பிரம்மா குமாரிகள் நிலையத்திற்கு வந்து தியானம் செய்கின்றார்கள். வேறு சிலர் தமது அன்றாட வாழ்வில் தியானத்தை இணைத்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலரோ பிற ஆன்மிகப் பயிற்சிகளுடன் தியானத்தையும் சேர்த்து செய்கிறார்கள். ஆனால் எவரெல்லாம் இப்பயிற்சியைத் தொடர்ந்து செய்து வருகிறார்களோ, அவர்களது வாழ்க்கையில் நிச்சயமாய் நலமும், வளமும் நிறைகிறது.
ராஜயோகம் என்பது உடற்பயிற்சியான ஆசனங்கள் அல்ல. அது உண்மையான நம்மை (ஆத்மாவை) பரமாத்மாவோடு இணைக்கும் மனப்பயிற்சியாகும். யோகா என்றால் தொடர்பு என்னும் பொருளாகும். ஆக ராஜயோகம் தன்னை எல்லாம் வல்ல இறைவன், பரம தந்தையுடன் இணைத்து, அமைதி மற்றும் பேரானந்தத்தில் திளைக்கச் செய்கிறது.
ராஜயோக தியானத்தின் நன்மைகள்
அளவற்ற மகிழ்ச்சி
மனபாரமற்ற வாழ்க்கை
மன அமைதி – ஓய்வு
ஆரோக்கிய வாழ்வு
வேகமாக குணமடைதல் (மனம் + உடல்)
நல்ல ஆழ்ந்த உறக்கம்
செயல் திறன் அதிகரித்தல்
உறவுகளில் நல்லிணக்கம்
இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு
எண்ணங்களின் கட்டுப்பாடு
கூடுதல் மன ஒருமைபாடு
நீடித்த ஆயுள்
தியான அனுபவம்
நீங்கள் இதுவரை தியானம் பழகவில்லையென்றாலோ, நீங்கள் தியான அனுபவத்தில் இறை சக்தியுடன் இணையவில்லையென்றாலோ, பிரம்மா குமாரிகளின் 8500க்கும் மேற்பட்ட ராஜயோக கிளை நிலையங்களில் அருகாமையிலுள்ள ஒன்றினை அணுகவும்.
தியானத்தின் படிகள்
மனத்தை ஓய்வாக வைத்தல் Relaxation
ஓய்வு என்பது மன அழுத்தமான விஷ்யங்களை வெளியேற்றி, மனதையும் உடலையும் அமைதியில் நிலை நிறுத்துவது.
ஒருமுகப்படுத்துதல் Concentration
ஒருமுகப்படுத்துவதானது எனது நேரத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தச் செய்வது. மனத்தை அமைதியில் நிலை நிறுத்தியபின், நான் சிந்திக்க வேண்டிய எண்ணங்களின் மீது கவனத்தை செலுத்துவது.
ஆழமாய்ச் சிந்திப்பது Contemplation
ஆழ்ந்து சிந்திப்பது என்பது எனது அடி உலகில் பயணித்து, அதாவது எனது குறைகளையும் நிறைகளையும் கண்டறிந்து நற்பண்புகளை உணர்வது.
உய்த்துணர்தல் Realisation
எனது உணர்வுகளும், புரியும் தன்மையும் இணையும் போது, மிக அர்த்தம் செறிந்த உண்மைகளை கண்டறிந்து உய்த்துணரும் அனுபவத்தில் திளைப்பதாகும்.
தியானம் Meditation
ஒரே எண்ணத்தில் சிந்தனையை செலுத்துவது.
மிக அற்புதமான தனது உன்னத நிலையைப் பற்றி விழிப்புணர்வு.
அழிவற்ற நிரந்தர சக்தியாகிய ஆத்மா, எல்லையற்ற சர்வ சக்தியான பரமாத்மாவை நினைப்பது.
மனத்தின் ஆக்கபூர்வ நேர்மறையான செயல்பாடுகளை இத்தியானத்தின் மூலம் சேமித்தல்.
தியானம் நம்முடைய ஏழு பண்புகளை வளர்க்கிறது
தூய்மை
அன்பு
அமைதி
சக்தி
ஞானம்
மகிழ்ச்சி
பேரானந்தம்
தியானப் பயிற்சியில் கலந்து கொள்வீர்
பிரம்மா குமாரிகளின் போதனைகளின் அடிப்படையான பாட முறை ராஜயோக தியானமாகும். இப்பயிற்சியில் ஆத்மாவிற்கும், இயற்கைக்குமிடையே உள்ள உறவு மற்றும் ஆத்மா – பரமாத்மா (கடவுள்) இப்பெளதீக உலகம் இம்மூன்றின் இணைந்த இயக்கம் பற்றிய விழிப்புணர்வும் கற்றுத் தரப்படுகிறது.
தொடர்ந்து அளிக்கப்படும் தியானப் பயிற்சியானது உங்களது மனப் பயணத்தை திறமையுடனும், வெற்றியுடனும் தொடர உதவுகிறது. இப் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.
தொடர்புக்கு
பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்தியாலயம்,
சாந்தி தம், Q 96, 3வது அவின்யூ, அண்ணாநகர்,
சென்னை – 600040.
ஃபோன் – 26266765 / 26202682
Email – annanagar.che@bkivv.org
Web – www.brahmakumaris.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.