காபி பிரியரா நீங்கள்? அப்படினா இது உங்களுக்குத்தான்!

உலகம் முழுவதுமே காபி மற்றும் டீ -க்கு என கோடிக்கணக்கான தனிப் பிரியர்கள் இருக்கிறார்கள். அதிலும், மணக்க மணக்க காபி அருந்துபவர்கள் ஏராளம்.
காபி பிரியரா நீங்கள்? அப்படினா இது உங்களுக்குத்தான்!

உலகம் முழுவதுமே காபி மற்றும் டீ -க்கு என கோடிக்கணக்கான தனிப் பிரியர்கள் இருக்கிறார்கள். அதிலும், மணக்க மணக்க காபி அருந்துபவர்கள் ஏராளம். காலை எழுந்தவுடன் காபி குடிக்கவில்லை என்றால் அந்த நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு காபிக்கான அலாதி பிரியர்கள் உள்ளனர். ஒரு கப் காபியை ஒரு மணி நேரமாக ரசித்து ருசித்து குடிப்பவர்களில் ஒருவராக நீங்களும் இருக்கலாம். அவர்களுக்கு ஒரு நற்செய்தி...

வழக்கமாக காபி குடிப்பதால் பல நல்ல பலன்கள் இருக்கின்றன. தலைவலி, புத்துணர்வுக்காக காபி அருந்துகிறோம். ஆனால், காபி குடிப்பதால்  நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நமது உடலில்  உள்ள செல்களை நச்சுகள், இரசாயனங்கள் போன்றவற்றினால் பாதிப்படைவதிலிருந்து தடுக்கிறது.

ஒரு நாளைக்கு மூன்று கப் காபி குடிப்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்களினால் உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக முன்னதாக செய்யப்பட்ட ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குடல் நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது மற்றும் காபி குடிப்பதால் ஒருவரின் ஆயுட்காலம் நீடிப்பதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. 

காலை உணவு முடித்தவுடன் சூடாக ஒரு பில்டர் காபி அருந்தினால் திருப்தி அடைபவர்கள் பலர். குளிர் காலத்தில் நண்பர்களுடன் வெளியே சென்று இதமாக காபி அருந்துவதெல்லாம் அலாதி சுகம்தான். நறுமணம் கமழும் அந்த காபி, உண்மையில் காபி பிரியர்களுக்கு மன அமைதியையும், புத்துணர்வையும் தருகிறது. 

அந்த வகையில், சைக்கிளிங்-க்கும், காபிக்கும் என்ன சம்மந்தம் இருக்குன்னு கேக்குறீங்களா? இருக்குங்க.. காபி குடிப்பதால் சைக்ளிங் செய்யும் வேகத்தை அதிகரிக்க முடியும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கோவென்ட்ரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 'நியூட்ரியன்ட்ஸ்' பிரிவின் கீழ் நடத்திய ஆய்வில், காபி குடிப்பதால் ஆண், பெண் இருபாலரிடமும் சைக்ளிங் செய்யும் வேகம் அதிகரித்துள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக 19 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் என 38 பேரிடம் ஆய்வு செய்யப்பட்டது. போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக போட்டியாளர்களுக்கு 3 மில்லிகிராம்.கிகி என்ற அளவில் காபி வழங்கப்பட்டது. இதன்பின்னர் நடைபெற்ற 5 கிமீ சைக்ளிங் போட்டியில், வழக்கத்தை விட ஆண் மற்றும் பெண்  போட்டியாளர்கள் முறையே 9 வினாடிகள் மற்றும் 6 வினாடிகள் அதிகமாக சைக்ளிங் செய்திருந்தனர்.

விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு காபி மிகச்சிறந்த ஊக்கியாக பயன்படும் என்றும் காபி அருந்துபவர்கள் மிக விரைவாக உற்சாகத்தோடு வேலையை செய்வர் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான கூடுதல் ஆராய்ச்சியை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

இதேபோன்று காபி உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது என்றும் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே காபி பிரியர்களே, காபி குடிப்பதால் உடல்நலம் கெட்டு விடுமோ என்று நீங்கள் பயப்படத் தேவையில்லை. காபியின் அலாதி சுகத்தை தொடர்ந்து அனுபவியுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com