குழந்தைகளுக்கு 'மல்டி டாஸ்க்கிங்' இருப்பது நல்லதா? கெட்டதா? 

தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்த நவீன உலகில், 'பன்முகத் திறன்' என்பது அனைத்துத் தரப்பினருக்குமே அவசியமாகி விட்டது. இந்த பன்முகத் திறனை இன்றைய இளைய தலைமுறையினரிடம் நாம் வெகுவாகக்
குழந்தைகளுக்கு 'மல்டி டாஸ்க்கிங்' இருப்பது நல்லதா? கெட்டதா? 

தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்த நவீன உலகில், 'பன்முகத் திறன்'(Multi-tasking) என்பது அனைத்துத் தரப்பினருக்குமே அவசியமாகி விட்டது. இந்த பன்முகத் திறனை இன்றைய இளைய தலைமுறையினரிடம் நாம் வெகுவாகக் காண முடியும். முக்கியமாக குழந்தைகள் மொபைலில் கேம் விளையாடிக் கொண்டே படிப்பது, ஹோம் ஒர்க் செய்துகொண்டே விளையாடுவது என ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளில் ஈடுபடுகின்றனர். 

இந்த பன்முகத் திறன் என்பது இளம் பருவத்தினருக்கு சில சமயங்களில் சாதகமாகவும், சில சமயங்களில் எதிர்மறையாகவும் என சம அளவிலே இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

11 முதல் 17 வயது வரையிலான இளம் தலைமுறையினர் 71 பேர் தேர்வு செய்யப்பட்டு இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டனர். சுமார் 14 நாட்கள் நடைபெற்ற இந்த ஆய்வில், நாள் ஒன்றுக்கு மூன்று முறை பல செயல்பாடுகளில் பங்கேற்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

எடுத்துக்காட்டாக மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டே படிப்பது, விளையாடிக்கொண்டே படிப்பது என ஒரே நேரத்தில் பன்முக செயல்களில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுகுறித்து பெரும்பாலானோர் நேர்மறையாக கூறினர். அதாவது, மொபைல் பயன்படுத்திக்கொண்டே ஹோம் ஒர்க் செய்வது நன்றாக இருக்கிறது என்று கூறியதோடு இரண்டையுமே சரியாக செய்தனர். ஒரு சிலர் இரண்டு வேலையும் ஒருசேர செய்வது கடினமாக உள்ளது என்று கூறினர். 

ஒவ்வொரு முக்கிய செயல்பாட்டின் போதும் அவர்கள் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர். மேலும், இளம் பருவத்தினர் மற்ற செயல்பாட்டின் போது, 40% நேரத்தை சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப ஊடகங்களில் செலுத்தவே விரும்புகின்றனர்.  குழந்தைகளின் இந்த முடிவு சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் இருக்கிறது. 

அதாவது, பாடல்கள் கேட்டுக்கொண்டே புத்தகத்தை படிப்பது என எடுத்துக்கொண்டால் சிலருக்கு படிக்கும்போது பாடல்கள் கேட்பது விருப்பமாகவும், சிலருக்கு இடையூறாகவும் இருக்கிறது. 

பன்முகத்திறன் என்பது முதலில் சற்று கடினமாக இருந்தாலும், அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க, அதனை பலர் நேர்மறையாக எதிர்கொள்கின்றனர் என்றும் இறுதியாக, பன்முகத்திறன் என்பது இளம் பருவத்தினரை நேர்மறை, எதிர்மறை என இரண்டையும் உணர வைக்கிறது; ஒவ்வொரு குழந்தைக்கு ஏற்ப இது மாறுபடுகிறது என்றும் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com