நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7 மூலிகைகள்

தொடர்ந்து மாறி வரும் பருவநிலையினால் உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டினை சரிசெய்யும் மூலிகைகள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

தொடர்ந்து மாறி வரும் பருவநிலையினால் உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டினை சரிசெய்யும் மூலிகைகள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.

பருவநிலை மாறுவதால் பொதுவாக உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தினசரி ஏற்படும் வானிலை மாற்றத்தால் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பவர்கள் எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். இதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, தினசரி உடற்பயிற்சி செய்தல், சரியான தூக்கம் ஆகியன உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க உதவுகின்றன. சத்தான காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலமும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்த முடியும். மூலிகைகள், வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்தும் 7 மூலிகைகளைப் பற்றி பார்க்கலாம்.

1.புதினா:
பொதுவாக எளிதில் கிடைக்கக் கூடிய ஒன்று. ஒவ்வாமைக்கு எதிராக சிறப்பாக செயல்படக் கூடியது. நம்மில் பலர் புதினா செரிமானப் பிரச்னைகளுக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடியது என நினைக்கிறோம். அதனை சாப்பிட்டால் வயிற்று வலி மற்றும் செரிமானக் கோளாறுகள் நீங்கிவிடும் என நினைக்கிறோம். ஆனால், புதினாவில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புதினா பாக்டீடியாவைக் கொல்லவும், மன அழுத்தத்தை குறைக்கவும், புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்தவும் மற்றும் வாய் புத்துணர்ச்சிக்காகவும் பயன்படுகிறது.

2.பூண்டு:
பூண்டினை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. பூண்டு சாப்பிடுவதன் மூலம் வைரஸ் மற்றும் பாக்டீடியாவினால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். தினசரி சிறிதளவு பூண்டு சாப்பிட்டு வந்தால் எந்த பருவநிலையாக இருந்தாலும் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்களுக்கு எதிராக செயல்புரியும்.

3.அம்ருதவல்லி:
அம்ருதவல்லி ரத்தத்தினை சுத்தப்படுத்தப் பயன்படுகிறது. அதேபோல செரிமானக் கோளாறுகளை சரிசெய்யவும் இந்த மூலிகை பயன்படுகிறது. நீரிழிவு நோயிலிருந்தும் விடுபட இதனை சாப்பிட்டு வரலாம். மன அழுத்தத்தினையும் குறைக்கும் தன்மை கொண்டது. மூட்டு வலியினை குறைக்கவும் அம்ருதவல்லி பயன்படுகிறது.

4.துளசி:
துளசி மருத்துவ குணமிக்கது. கடவுளை வழிபடும்போது துளசித் தண்ணீரினை பலரும் பயன்படுத்த பார்த்திருப்போம். துளசி எங்கிருந்தாலும் அதன் மருத்துவ குணத்தை பரப்பும் தன்மை கொண்டது. அனைவரது வீடுகளிலும் துளசி ஒரு மிக சிறந்த நோய் எதிர்ப்புப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சளி,இருமல்,காய்ச்சல், மன அழுத்தம் என பலவற்றிலிருந்தும் விடுபட துளசி பெரிதும் உதவுகிறது.

5.அஸ்வகந்தா:
அஸ்வகந்தா தொன்றுதொட்டு இன்று வரை பரவலாக எடுத்துக் கொள்ளப்பட்டு வருகிறது. உடல் அழுத்தத்தில் இருந்து விடுபட அஸ்வகந்தா உதவுகிறது. கோபம் மற்றும் கவலையை குறைப்பதற்கும் அஸ்வகந்தா பயன்படுத்தப்படுகிறது.

6.நெல்லிக்காய்:
இந்திய நெல்லிக்காய் பல வகையான நோய்களுக்கு தீர்வாக உள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு தீர்வாக அமைகிறது. நீரிழிவு நோய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றவும் பயன்படுகிறது.

7.முருங்கை:
உடலின் பல நோய்களுக்கு முருங்கை ஒரு தீர்வாக அமையும். ஆனால், பலரும் அதன் மருத்துவ குணங்கள் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. முருங்கை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்த உதவுகிறது. நமது உடலுக்குத் தேவைப்படும் ’வைட்டமின் சி’ முருங்கையில் அதிகம் உள்ளது. உடலில் ஏற்படும் காயங்களை ஆற்றவும் முருங்கை பயன்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com