
'ஏலக்காய்' - இதில் நன்மைகள் பல இருந்தாலும், தூக்கம் எமக்கு தொலைதூரம் என்று கண் விழி சிமிட்டிக் கொண்டிருப்பவரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கான சிறந்த உணவாக ஏலக்காய் இருக்கும்.
ஏலக்காயில் உள்ள 'மெக்னீசியம்' மற்றும் 'ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ்’ நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸ் ஆக்குவதுடன் 'மெலடோனின்’ சுரப்பையும் ஊக்குவிக்கிறது. தூக்கம் வருவதற்கு உடலில் 'மெலடோனின்’ என்னும் ஹார்மோன் முக்கிய பங்காற்றுகிறது.
ஆக, ஏலக்காயை இரவில் மென்று சுவைப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது; இதயத்துடிப்பை இயல்பான வேகத்தில் இயங்கச் செய்ய வழிவகுக்கிறது; பதற்றத்தை தணித்து நன்றாக தூங்க உடலைத் தயார்படுத்துகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனை தினசரி வழக்கமாக்கிக் கொள்வதும் நல்லதே..!
ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் 'கல்லீரல்’ நலமாக இயங்க ஊக்குவிக்கிறது. உடலிலுள்ள கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்ற இவை உதவுவதால் ரத்தம் சுத்தமாகிறது.
இதனால் இயற்கை முறையிலேயே மேனி பொலிவு பெறுகிறது, உடலில் ஆற்றல் மேம்படுகிறது, நோயெதிர்ப்பு சக்தியும் கூடுகிறது என்றும் தெரிவிக்கிறார்கள்.
ஆயுர்வேத மருத்துவ முறையில் 'திரிதோஷ நிவர்த்தி’ மூலிகைகளுள் ஒன்றாக கருதப்படும் ஏலக்காய் மனித உடலில் 'கபம், வாதம், பித்தம்’ ஆகிய மூன்றையும் சீராக்கும் அருமருந்தும்கூட..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.