

மக்கள் தங்கள் உடலைக் கவனித்துக் கொள்கிறார்களோ இல்லையோ.. செல்போனுக்கு சார்ஜ் போடுவது, அதற்கு கவர் போட்டு, மழையில் நனையாமல், விழுந்தால் கண்ணாடி உடையாமல் இருக்க டெம்பர் கிளாஸ் போடுவது, என பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறார்கள்.
தொலைத்தொடர்பு சாதனமாக மட்டும் இருந்தது, பட்டன் வைத்த செல்போன்கள் இருந்தபோது மட்டுமே. இப்போது டைம் பார்க்க, அலாரம் வைக்க என பல்வேறு சாதனங்களின் முக்கியத்துவத்தை இழக்கவைத்து, மனிதர்களின் நிழல்போல அல்ல அல்ல உயிர் போல மாறியிருக்கிறது செல்போன்.
ஒரு மனிதன் எங்கிருந்தான், எங்கே செல்கிறான் என அனைத்தையும் செல்போன் லோகேஷன் மூலமே அறிந்துகொள்ள முடியும் என்றால், அது மனிதர்களுடன் கலந்துவிட்டதாகத்தானே அர்த்தம்.
ஆனால், ஒன்றை மட்டும் மக்கள் மறந்துவிடுகிறார்கள். அதாவது, தற்போது ஸ்மார்ட் போன்களில் பேட்டரிகளை தனியே வெளியே எடுக்க முடியாது. பேட்டரியை மாற்றவும் முடியாது. எனவே, செல்போனின் உயிர் போன்ற பேட்டரியை பக்குவமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எனவே, ஒரு செல்போனின் பேட்டரி நீண்ட நாள்களுக்கு நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்றால், எப்போதும் செல்ஃபோனை முழுமையாக சார்ஜ் போடக்கூடாது என்கிறார்கள். அடிக்கடி 100 சதவீதம் சார்ஜ் போடுவதால்தான் செல்போன் விரைவில் செயலிழக்கிறதாம்.
அதாவது செல்போனை சார்ஜ் போடும்போது முதல் 60 சதவீதம் சார்ஜ் ஆகும் வரைதான் பேட்டரியின் வோல்டேஜ் அதிகமாக இருக்கும். அதன் பின்னர், படிப்படியாகக் குறையுமாம்.
ஆனால், எப்போதுமே 100 சதவீதம் சார்ஜ் போடக்கூடாதா என்றால், அப்படியில்லை. எப்போதாவது போடுவதால் பிரச்னை இல்லை. எப்போதுமே, நாள்தோறும் பல முறை 100 சதவீதம் சார்ஜ் போட்டால், பேட்டரி விரைவில் செயலற்றுப்போகலாம் எனக் கூறப்படுகிறது.
எனவே, ஒரு செல்போனை வழக்கமாக 80 சதவீதம் வரை மட்டுமே சார்ஜ் போட்டு, அதனைப் பயன்படுத்துவது நல்லது. 100 சதவீதம் சார்ஜ் போட்டு, பேட்டரி அதிக வோல்டேஜில் தொடர்ந்து இயங்க வேண்டிய அவசியமில்லை என்பதால், பேட்டரியின் ஆயுள் நீடிக்கும். சிம்பிள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.