

வீடுகளில் இப்போது ஏர் ஃபிரையர் பயன்பாடு மெல்ல அதிகரித்து வரும் நிலையில், அதன் பயன்பாடுகள் குறித்து பலருக்கு இன்னமும் அச்சம் நிலவுகிறது.
ஆனால், அவென் போன்று, இதில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றே இதுவரை சுகாதார நிபுணர்கள் உறுதி அளிக்கிறார்கள்.
உணவுப் பொருள்களை நன்கு வறுத்து சாப்பிட, எண்ணெய் இல்லாமல் வறுக்க ஏர் ஃபிரையர் பயன்படுகிறது. காய்கறிகள், கோழிக்கறி, மீன் போன்றவற்றை சீராக ரோஸ்ட் செய்யவும், அதன் பக்குவம் குறையாமல் மசாலாக்களுடன் பின்னிப் பிணைந்து அதிகம் எண்ணெய் ஊற்றாமல் வறுத்தெடுக்கவும் வந்ததுதான் ஏர் ஃபிரையர்.
ஏர் ஃபிரையரில் என்ன சமைப்பது? எப்படி சமைக்க வேண்டும் என்று பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, பல சமையல் வேலைகளை ஏர் ஃபிரையர் எளிதாக்குகிறது.
வழக்கமாக மிக்ஸி, கிரைண்டர் போல நன்கு சமதளமான இடத்தில்தான் ஏர் ஃபிரையரை வைக்க வேண்டும். அதன் அருகே எரியும் வகையிலான எந்தப் பொருளும் இருக்கக் கூடாது.
ஏர் ஃபிரையரின் பெயருக்கு ஏற்ப அதனைச் சுற்றி நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
ஒவ்வொரு நிறுவனத்தின் ஏர் ஃபிரையரும் தனித்துவமாக வடிவமைக்கப்படுகிறது. எனவே, அதற்குரிய பயன்பாட்டு நெறிமுறைகளை படிப்பது அவசியம்.
ஏர் ஃபிரையர்கள் சமைத்துக் கொண்டு இருக்கும்போதே, உணவுப் பொருளை வெளியே எடுத்துப் பார்க்கவும், மீண்டும் சமைக்கவும் வசதி உள்ளது.
குக்கரை ஒரு முறை திறந்துவிட்டால் அதனை மீண்டும் சமைக்க முடியாது என்ற நிலைமை இல்லாமல் சரியாக சமைக்கப்படாமல் இருந்தால் மீண்டும் அதனை ஏர் ஃபிரையரில் வைத்து சமைத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் என தனித்துவமான வெப்பநிலை, சமைப்பதற்கான நேரம் இருக்கிறது. அதனைக் கணக்கிட்டு சரியாக வைக்க வேண்டியது மட்டுமே அவசியம்.
பயன்படுத்துவதற்கு முன், சமையல் டிரேவை ஒரு முறை சுத்தப்படுத்துவது அவசியம்.
மேலும், ஏர் ஃபிரையர்கள் பயன்படுத்தவும் சுத்தப்படுத்தவும் எளிமையாக உள்ளது. சமையல் செய்யும் அந்த டிரேவை சற்று மிதமான சூடுநீரில் மென்மையான பஞ்சு அல்லது துணி கொண்டு சுத்தப்படுத்துவது நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.