பெடிக்யூர் செய்ய வேண்டும்! ஆனால் காசு செலவில்லாமல்.. எப்படி?

வீட்டிலேயே பெடிக்யூர் செய்யும் முறை பற்றி..
file photo
பெடிக்யூர்ENS
Updated on
1 min read

கால்களில் உள்ள கருமையைப் போக்கி, கால்களை அழகாக வைத்துக்கொள்ள அழகு நிலையங்களில் பெடிக்யூர் செய்யப்படுகிறது. ஆனால், அதனை நாமே சுயமாக செய்து கொள்ள முடியும்.

கால்களை அழகாக வைத்துக்கொள்ள எடுத்துக் கொள்ளும் சிகிச்சைகளே பெடிக்யூர். அதை வீட்டில் பெரிய அளவில் செலவில்லாமல் செய்யலாம். மற்றவர்களுக்கும் செய்யச் சொல்லி பரிந்துரைக்கலாம்.

கால் நகங்களில் நெயில் பாலிஷ் இருந்தால், தரமான நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கவும்.

ஒரு அகன்ற பிளாஸ்டிக் டப்பில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றவும்.

அதில் 1 தேக்கரண்டி ஷாம்பு சேர்த்து கலந்து, பின் அதனுள் கால்களை 5 நிமிடம் ஊற வைக்கவும்.

பிறகு, சின்ன பிரஷ் அல்லது பயன்படுத்திய பல்தேய்க்கும் பிரஷ் கொண்டு கால்களைத் தேய்த்துவிடவும்.

அந்த ஷாம்பு தண்ணீரை ஊற்றிவிட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் 1 தேக்கரண்டி தேன் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்துடிவிடவும்.

எலுமிச்சைத் தோலை தூக்கி எறியாமல் தண்ணீரில் போட்டு, கால்களை மீண்டும் 5 நிமிடம் அதில் ஊற விடவும்.

பின் அதில் இருக்கும் எலுமிச்சைத் தோலைக் கொண்டு கால்களைத் தேய்க்க வேண்டும்.

பிறகு நாம் பயன்படுத்தும் கால்களை தேய்க்கும் பியூமிக் கல் பயன்படுத்தி, குதிகால்களை நன்கு தேய்த்து விட்டவும்.

மென்மையாக தேய்க்க வேண்டும். கால் நன்கு ஊறி இருக்கும் என்பதால் கடினமாக செய்ய வேண்டாம்.

பிறகு கால்களை வெளியே எடுத்துவிட்டு தண்ணீரை ஊற்றிவிடவும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி காபி பொடி, 2 தேக்கரண்டி சர்க்கரை, 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

அதனை கால்களில் தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு கையால் கால்களை மசாஜ் செய்வது போல சிறிது நேரம் தேய்த்துவிட்டு, சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

கடைசியாக ஒரு மாய்ஸ்சுரைசரை கால்களில் தடவி, மென்மையாக 5 நிமிடம் மசாஜ் செய்யவும்.

இந்த முறையில் மாதம் இருமுறை பெடிக்யூர் செய்து வந்தால் கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி பாதம் அழகாக இருக்கும்.

Summary

About how to do a pedicure at home..

file photo
வீட்டுக் கடன் நிறைவடைந்ததும் வங்கியிலிருந்து வாங்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com