சமையலுக்கு ஏற்றது அலுமினியமா? அல்லது ஸ்டீல் பிரஷர் குக்கரா?
சமையலுக்கு ஏற்றது அலுமினியமா? அல்லது ஸ்டீல் பிரஷர் குக்கரா? என்பது பற்றி..

பிரஷர் குக்கர்
பார்ப்பதற்கு நன்றாக இருப்பது, விலை உள்ளிட்ட காரணங்களையும்விட, அலுமினியம் அல்லது ஸ்டீல் பிரஷர் குக்கரில் எதைத் தெரிவு செய்வது என்பதில் பல்வேறு முக்கிய காரணிகளும் இடம்பெற்றுள்ளன.
சமையல் பழக்கம், பயன்படுத்தும் முறை, அதிக நாள்கள் பயன்பாடு, உலோகத்தின் நன்மைகள் போன்றவற்றையும் மக்கள் கண்டிப்பாக கவனித்துத்தான் வாங்க வேண்டும்.
பிரஷர் குக்கர் என்பது, இந்திய சமையலறையில் நாள்தோறும் பயன்படுத்தப்படும் ஒரு சமையல் பாத்திரம். எனவே, அதன் முக்கியத்துவம் நிச்சயம் அனைத்து பெண்களுக்கும் சமையல் செய்யும் ஆண்களுக்கும் தெரிந்திருக்கும்.
நாள்தோறும் பயன்படுத்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரஷர் குக்கர்தான் சிறந்ததாக இருக்கும். அதிக நாள்கள் பயன்படுத்தலாம். ஆண்டு வரும். அலுமினியிம் பிரஷர் குக்கர் என்றால் எடை குறைவாக இருக்கும், விலையும் குறைவு என்பதால் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
மேலும், இதன் சூடுபிடிக்கும் திறனும் அதிகம். அடிப்பிடிக்கும் பிரச்னையும் குறைவு.
அதே வேளையில், சிலர் அசைவத்துக்கு தனி, சைவத்துக்கு தனி, அசைவம் எப்போதாவது சமைப்போம், அதற்கு மட்டும் என நினைத்து வாங்கினால் அலுமினியம் வாங்கலாம்.
ஆனால், இரும்பு நார் கொண்டு தேய்ப்பது, சுரண்டுவது, அடிப்பிடித்துக் கொண்டால் அதை அழுத்தித் தேய்ப்பது போன்றவற்றை தவிர்த்து எளிமையான முறையில் பயன்படுத்தலாம்.
ஸ்டீல் பிரஷர் குக்கர் என்றால் விலை சற்று அதிகம் என்றாலும் உடலுக்கு நல்லது. அதிக காலம் பயன்படுத்தலாம். நாள்தோறும் பயன்படுத்த ஏற்றது என்பதை நினைவில் கொள்க.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





