டாடா ஸ்டீல் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து ஏபிஎல் அப்பல்லோ ட்யூப்ஸ் பங்குகள் சரிவு!
ஏபிஎல் அப்பல்லோ ட்யூப்ஸ் நிறுவனத்தின் 26.6 சதவீத புரமோட்டர் பங்குகளைக் கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை டாடா ஸ்டீல் நிறைவேற்றம்.

APL Apollo Tubes
புதுதில்லி: ஏபிஎல் அப்பல்லோ ட்யூப்ஸ் நிறுவனத்தின் முழுமையான 26.6 சதவீத புரமோட்டர் பங்குகளைக் கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை டாடா ஸ்டீல் நிறைவேற்றியதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பங்குகள் இன்று 30% மேல் சரிந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்கு 11.40% சரிந்து ரூ. 1,478 ஆக இருந்தது. இன்றைய வர்த்தகத்தில், இந்த பங்கு 20% சரிந்து 52 வாரங்களில் இல்லாத குரைந்தபட்ச விலையான ரூ. 1,334.5 ஐ எட்டியது.
கடந்த இரண்டு நாட்களில், இந்தப் பங்கு 30.35 சதவீதம் சரிந்துள்ளது. அதே வேலையில், கடந்த இரண்டு அமர்வகளில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 17,885.36 கோடி குறைந்து ரூ. 41.037 கோடியாக ஆனது.
சந்தை மதிப்பீட்டின்படி டாடா குழுமத்தின் மூன்றாவது மதிப்புமிக்க நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகளும், பிஎஸ்இ-யில் பங்கு ஒன்றுக்கு ரூ. 15910 என்ற நிலையில் முடிவடைந்தன. இதனையடுத்து இரண்டு வர்த்தக அமர்வுகளில் நிறுவனத்தின் சந்தை மூலாதனம் ரூ. 23,238.2 கோடியாக குறைந்து ரூ. 1,98,611.57 கோடியாக உள்ளது.
ஏபிஎல் அப்பல்லோ டியூப்ஸ் நிறுவனத்தின் 26.6 சதவீத புரமோட்டர் பங்குகளை ரூ.15,510 கோடிக்கு கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளதாகவும், மேலும் அந்த நிறுவனத்தின் ரூ.16,756 கோடி மதிப்பிலான 26 சதவீத பங்குகளைக் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் டாடா ஸ்டீல் தெரிவித்தது.
இந்த ஒப்பந்தம், டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு ஸ்டீல் குழாய்கள் மற்றும் வண்ணப்பூச்சுப் பொருட்களின் உற்பத்தியை தற்போதுள்ள 2.5 மில்லியன் டன்களிலிருந்து ஆண்டுக்கு 7.5 மில்லியன் டன்களாக விரிவுபடுத்த உதவும்.
Summary
Shares of APL Apollo Tubes fall on Wednesday, tumbling over 30 per cent.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


