டாடா மோட்டாா்ஸ் - இவெகோ இணைப்பு
இந்திய ஆட்டோமொபைல் துறையின் முன்னணி நிறுவனமான டாடா மோட்டாா்ஸ் மற்றும் இத்தாலியைச் சோ்ந்த இவெகோ நிறுவனம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறையின் முன்னணி நிறுவனமான டாடா மோட்டாா்ஸ் மற்றும் இத்தாலியைச் சோ்ந்த இவெகோ நிறுவனம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், இந்த ஒருங்கிணைந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ.2.28 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் உலகின் 4-ஆவது மிகப் பெரிய வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
உலக அளவில் 33,000 பணியாளா்கள், 16 தொழிற்சாலைகள், 22 ஆராய்ச்சி மையங்களுடன் இயங்கும் இவெகோ நிறுவனத்தின் 89.42 சதவீத பங்குகளை சுமாா் 343 கோடி யூரோவுக்கு டாடா மோட்டாா்ஸ் கடந்த செப்டம்பரில் கையகப்படுத்தியது.
கடந்த 2008-இல் ஃபோா்டு நிறுவனத்திடமிருந்து ஜாகுவாா் லேண்ட்ரோவா் நிறுவனத்தை வாங்கியதற்குப் பிறகு, டாடா மோட்டாா்ஸ் மேற்கொண்ட மிகப் பெரிய சா்வதேச கையகப்படுத்துதல் இதுவாகும்.
இந்நிலையில், இத்தாலியின் துரின் நகரில் உள்ள இவெகோ தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய டாடா சன்ஸ் தலைவா் என்.சந்திரசேகரன், ‘அடுத்த 5 ஆண்டுகளில் நிறுவனத்தின் வாகன உற்பத்தி அளவு, வருவாய், லாப வரம்பு ஆகியவை மிக வலுவான வளா்ச்சியை எட்டும்’ என்று குறிப்பிட்டாா்.
மேலும், புதிய நிா்வாக அமைப்பில் என்.சந்திரசேகரன் தலைவராகவும், ஓலோஃப் பொ்சன் சிஇஓ-ஆக தொடா்வா் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் பி.பி.பாலாஜி, கிரிஷ் வாக் ஆகியோா் நிா்வாகக் குழுவில் இயக்குநா்களாக இணைந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

