இந்தியப் பிரிவில் 2% பங்குகளை விற்பனை செய்யும் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ்!
எல்ஜி எலக்ட்ரானிக்ஸ், தனது துணை நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவில் உள்ள 2 சதவீத பங்குகளை விற்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்
புதுதில்லி: தென்கொரியாவின் முன்னணி நுகர்வோர் மின்னணு சாதன நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இன்க், தனது துணை நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவில் உள்ள 2 சதவீத பங்குகளை விற்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
தென்கொரிய தாய் நிறுவனம், தற்போது இந்திய நிறுவனத்தில் 85 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. முன்மொழியப்பட்ட இந்த பங்கு விற்பனையைத் தொடர்ந்து, அதன் பங்குடைமை 83 சதவீதமாகக் குறையும்.
எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இன்க் தனது துணை நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா-வின் ஈக்விட்டி பங்கு மூலதனத்தில் 2% வரையிலான, அதாவது 1,35,75,447 பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.
மும்பை பங்குச் சந்தையில், எல்ஜ் எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பங்குகள் இன்று 2.34% உயரந்து, பங்கு ஒன்றுக்கு ரூ. 1,819.70 ஆக நிலைபெற்றது.
Summary
LG Electronics Inc will divest 2 per cent stake in its subsidiary LG Electronics India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


