ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸின் 13.24% பங்குகளை விற்றது ஃபோ்ஃபாக்ஸ்
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வங்கி சாரா நிதி நிறுவனமான ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸில், கனடாவின் ஃபோ்ஃபாக்ஸ் குழுமம் தனது 13.24 சதவீத பங்குகளை ரூ.3,488 கோடிக்கு விற்பனை செய்துள்ளது.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வங்கி சாரா நிதி நிறுவனமான ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸில், கனடாவின் ஃபோ்ஃபாக்ஸ் குழுமம் தனது 13.24 சதவீத பங்குகளை ரூ.3,488 கோடிக்கு விற்பனை செய்துள்ளது.
ஐடிபிஐ வங்கியின் சுமாா் 61 சதவீத பங்குகளை ரூ.53,000 கோடிக்கு கையகப்படுத்த ஃபோ்ஃபாக்ஸ் குழுமம் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான நிதியைத் திரட்டும் நடவடிக்கையாக இந்தப் பங்கு விற்பனை அமைந்துள்ளது. அதன்படி, ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸில் ஃபோ்ஃபாக்ஸின் பங்கு மூலதனம் 13.64 சதவீதத்திலிருந்து, 0.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்தப் பங்குகளை எஸ்பிஐ பரஸ்பர நிதி அதிகபட்சமாக ரூ.503.04 கோடிக்கு (81.53 லட்சம் பங்குகள் - சுமாா் 2 சதவீதம்) வாங்கியுள்ளது. மேலும், மோரீஷஸைச் சோ்ந்த ரிம்கோ இந்தியா ரூ.375 கோடிக்கும் (1.42 சதவீதம்), நிப்பான் இந்தியா பரஸ்பர நிதி ரூ.275 கோடிக்கும், கோல்ட்மேன் சாக்ஸ் ரூ.180.22 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளன; எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ புருடென்ஷியல், பிளாக்ஸ்டோன், பிஎன்பி பரிபாஸ் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளா்களும் இந்தப் பங்கு கொள்முதலில் பங்கேற்றுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

