சிஜேபி அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம்ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

ஃபேர்ஃபாக்ஸ் வசமாகும் ஐடிபிஐ வங்கி? விற்பனைக்கு அமைச்சரவை ஒப்புதல்!

ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீதப் பங்குகளை ரூ.52,878 கோடிக்கு ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்ஷியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

ஐடிபிஐ வங்கி

Updated On :

புதுதில்லி: ஏர் இந்தியா விற்பனைக்குப் பிறகு, மத்திய அமைச்சரவை, ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீதப் பங்குகளை ரூ.52,878 கோடிக்கு ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்ஷியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. தனது பங்குகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு இலக்கு நிா்ணயித்து, பங்கு விலக்கல் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. அதே வேளையில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளைத் தனியார்மயமாக்குவதில் இது புதிய அத்தியாயத்தை தொடங்கக்கூடும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு எடுத்த இந்த முடிவு, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த ஒரு செயல்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்து.

இந்த விற்பனை நடவடிக்கை முழுமையடைந்தால், இந்தியப் பொருளாதாரத்தின் நிதித் துறையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடாக இது அமையும் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐடிபிஐ வங்கியின் மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு குறித்து, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு இது குறித்து விளக்கமளித்தார்.

மறுசீரமைக்கப்பட்ட அந்த நிறுவனத்தில் அரசும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் இணைந்து 34 சதவீத பங்குகளைத் தக்கவைத்துக் கொள்ளும்.

Summary

The Cabinet on Wednesday approved the sale of a 60.72 per cent stake in IDBI Bank to Fairfax Financial Holdings for Rs 52,878 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.