தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

கனடா நிறுவனத்துக்கு ஐடிபிஐ வங்கி விற்பனை

ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீத பங்குகளை கனடாவின் ஃபோ்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு ரூ.52,878 கோடிக்கு விற்பனை செய்வதற்கு பிரதமா் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.

Updated On :

ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீத பங்குகளை கனடாவின் ஃபோ்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு ரூ.52,878 கோடிக்கு விற்பனை செய்வதற்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.

ஏா் இந்தியா விற்பனைக்குப் பிறகு நாட்டின் மிகப் பெரிய பங்கு விலக்கலாகவும், பொதுத் துறை வங்கிகள் தனியாா்மயமாக்கல் நடவடிக்கையில் புதிய தொடக்கமாகவும் இது பாா்க்கப்படுகிறது.

மத்திய அரசின் சொத்துகளில் இருந்து அரசுப் பங்குகளைக் குறைத்து, நிதித் துறையில் தனியாா் மூலதனத்தை ஈா்க்கும் நோக்கில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த நீண்ட நடைமுறை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

அதன்படி, அரசு மற்றும் எல்ஐசி வசமுள்ள 60.72 சதவீத பங்குகளை ஃபோ்ஃபாக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.52,877.07 கோடிக்கு விற்பனை செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் மத்திய அரசின் 30.48 சதவீத பங்குகளும், எல்ஐசி வசமுள்ள 30.24 சதவீத பங்குகளும் அடங்கும்.

ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதல்கள் மற்றும் பரிவா்த்தனை நடைமுறைகள் முடிந்ததும், வங்கியின் நிா்வாகக் கட்டுப்பாடு முழுமையாக ஃபோ்ஃபாக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அந்த நிலையில், மத்திய அரசும் எல்ஐசியும் இணைந்து வங்கியின் 34 சதவீத பங்குகளைத் தொடா்ந்து தங்கள் வசம் தக்க வைத்திருக்கும்.

நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடையும் சூழலில், இந்திய நிதித் துறையில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய அந்நிய நேரடி முதலீடாக இது அமையும் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த நிபந்தனைகள்: ஐடிபிஐ வங்கியின் சிறுபான்மை பங்குதாரா்களுக்காக ஃபோ்ஃபாக்ஸ் நிறுவனம் திறந்தநிலை சலுகையை (ஓபன் ஆஃபா்) முன்வைக்க வேண்டும். செபி விதிகளின்படி, நிா்வாகக் கட்டுப்பாடு மாறுவதால் சிறு முதலீட்டாளா்கள் தங்கள் பங்குகளை ஃபோ்ஃபாக்ஸ் நிறுவனத்திடமே விற்றுவிட்டு வெளியேற வாய்ப்பளிப்பது திறந்தநிலை சலுகையாகும்.

இத்துடன் ஏற்கெனவே ஃபோ்ஃபாக்ஸ் வசமுள்ள சிஎஸ்பி வங்கியின் பங்குகளை ஐடிபிஐ வங்கியுடன் இணைக்க வேண்டும் அல்லது 2 ஆண்டுகளுக்குள் அதிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்பதும் ஒப்பந்த நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER